Begin typing your search above and press return to search.
டெல்லி கலவரத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பா.? கைதான கணவன், மனைவி!
டெல்லி கலவரத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பா.? கைதான கணவன், மனைவி!

By :
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தை தூண்டியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய, தம்பதியினரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்
இவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில் இவர்களின் பெயர் ஜகான்ஜேப் சமி, மற்றும் ஹீனா பஷீர் என்பது தெரிய வந்த நிலையில், மேற்கொண்டு அடுத்தகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இருவரும் டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை தூண்டியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்கள் ஊடாக, காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது
Next Story