கரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்த ஹரிஷ் கல்யாண் !
கரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்த ஹரிஷ் கல்யாண் !

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளை மூட உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரவிருந்த திரைப்படங்கள் பாதிப்படைந்தாலும் கடந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் நான்காவது நாளே திரையரங்கள் மூடப்பட்டதால் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான 'தாராள பிரபு' பெரும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலமை சரியானது, இப்படத்தினை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், ஹரிஷ் கல்யாண் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் 'தாராள பிரபு' திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.