தி.மு.க., வி.சி.க., தி.க., முகத்தில் கரியை பூசிய இளமதி.. திரௌபதியாய் மாறியது எப்படி.?
தி.மு.க., வி.சி.க., தி.க., முகத்தில் கரியை பூசிய இளமதி.. திரௌபதியாய் மாறியது எப்படி.?

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வெளியாகி நல்ல பெயரை பெற்றுள்ளது.
பெண்களை எப்படி எல்லாம் நாடகமாடி திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர் என்பது தான் இந்த படத்தின் மைய கருத்து ஆகும்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை ஏமாற்றி நாடக காதல் வலையில் சிக்க வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த சில பேர் துணையுடன் செல்வன் என்பவர் இளமதியை கட்டாயப்படுத்தி தாலி கட்டியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் நாடக காதல் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பதற்காக இளமதியை அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் மன வேதனை அடைந்த இளமதி கடந்த 3 நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய நாடக காதல் கும்பல் இளமதியை கடத்தி சென்று விட்டனர் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர்.
தமிழக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இதற்கு ஒரு படி மேல் சென்று தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் இளமதியை தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே கடத்தி சென்றுவிட்டனர்.
உடனே அவரை காவல் துறையினர் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட சில அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாடக காதலுக்கு துணை போகும் விதமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியை பூசும் விதமாக நேற்று (14ம் தேதி) சேலம் மாவட்டம், மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது வக்கீல் சரவணன் உடன் இளமதி ஆஜராகினார்.
அப்போது திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த சில பேர் தன்னை கடத்தி கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்தனர்.
அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தான் பெற்றோர்களுடன் செல்லவே விருப்பப்படுகிறேன் என்றார்.
இதனையடுத்து பெண்ணை கடத்திய குற்றத்திற்காக செல்வன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
யாருக்கும் பயப்படாமல் தன்னுடைய பெற்றோருடன் செல்கிறேன் என்று சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
சில பெண்கள் நாடக காதலால் வாழ்க்கை சீரழிந்து விட்டால் அதனை வெளியில் சொல்ல மாட்டார்கள். தன்னுடைய முகம் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியே தெரிந்து விடும் என்று பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு மத்தியில் இளமதி இப்படி மாறுவதற்கு திரௌபதி படம்தான் காரணம் என்று ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் பேசி கொள்கின்றனர்.
இத்தனை நாட்களாக திரைப்படம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமூதாயத்தில் இப்படி ஒரு மாற்றம் வந்தது இதுவே முதல் முறை என்றே சொல்லலாம்.