திட்டமிட்டு போலி செய்தி பரப்பும் விடுதலை சிறுத்தை உறுப்பினர், தி.மு.க எம்.பி ரவிகுமார்!
திட்டமிட்டு போலி செய்தி பரப்பும் விடுதலை சிறுத்தை உறுப்பினர், தி.மு.க எம்.பி ரவிகுமார்!

கொரோனா வைரஸ் மனித பேரழிவை வைத்து அரசியல் லாபம் பார்க்க துடிக்கின்றது தி.மு.க கட்சி. அந்த முயற்சிக்கு சற்றும் சளைக்காமல் திட்டமிட்ட போலி செய்தி பரப்பி இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதில் குறியாக இருக்குறார் விடுதலை சிறுத்தை பொறுப்பாளரும் தி.மு.க எம்.பி-யுமான ரவிகுமார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவின் கொரொனா தடுப்பு நடவடிக்கை - சீன ஊடக நிறுவனம் 'பாராட்டு'" என பதிவிட்ட ஒரு போலி ட்விட்டர் கணக்கின் ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ளார். பல முறை அந்த கணக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இல்லை, போலி கணக்கு என நேற்றில் இருந்து தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் வேண்டும் என்ற சொந்த நாட்டை மட்டம் தட்ட இந்த பதிவை செய்து தற்போது பல்ப் வாங்கி வருகிறார் ரவிகுமார்.
அந்த போலி செய்தி பதிவு:
இந்தியாவின் கொரொனா தடுப்பு நடவடிக்கை - சீன ஊடக நிறுவனம் 'பாராட்டு' https://t.co/4eJoLXeE6Y
— Dr Ravikumar M P (@WriterRavikumar) March 24, 2020
இனியேனும் இது போன்ற மூன்றாம் தர விளம்பர போலி பதிவுகளை பதியாமல் தன் மரியாதையை காப்பாற்றிக் கொள்வாரா ரவிகுமார் அல்லது தி.மு.க-வின் ₹200 சைபர் கூலிகளை போல் தான் இயங்குவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.