பிரதமர் மோடிக்கு ஆதரவு.. தர்மபுரியில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கின்றனர்.!
பிரதமர் மோடிக்கு ஆதரவு.. தர்மபுரியில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கின்றனர்.!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 22ம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடியுங்கள் என்று கூறினார்.
அவர் கூறிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒட்டு மொத்த இந்தியாவும் ஊரடங்கு உத்தரவை கடை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று விழிப்புணர்வு அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், அதே போன்று மாவட்டத்தின் இதர பகுதிகளான, பென்னாகரம், இண்டூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், காரிமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள பேருந்து நிலையமும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் முழுமையாக ஆதரித்து வருகினறனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் என்றும் ஆதரவு அளிப்பார்கள் என்றே சொல்லலாம்.