கொரோனா என்ற எமன்.. உயிரை பணயம் வைப்பது அரசு மருத்துவர்களே.. அலசல் ரிப்போர்ட்.!
கொரோனா என்ற எமன்.. உயிரை பணயம் வைப்பது அரசு மருத்துவர்களே.. அலசல் ரிப்போர்ட்.!

உலகிலேயே ஆபத்தான நோய் வரும்போதெல்லம் உயிரை பணயம் வைத்து வேலை செய்வது அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்தான்.
எப்போதெல்லாம் உயிர் கொல்லி நோய் நாட்டில் பரவுகிறதோ, அப்போதிலிருந்து தன் உயிரை பற்றி கவலை படாமல் இரவு பகலாக சிகிச்சை அளிப்பவர்கள் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும்தான்.
ஆபத்தான் காலங்களில் தனியார் மருத்துவர்கள் (கார்ப்பரேட்) இது போன்ற சேவைகளில் யாரும் ஈடுபடுவதில்லை. அவர்கள் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே.
கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் பரவும் இந்த உலகில், மருத்துவர்களின் சேவைகளை தற்போது ஒரு பக்கம் கொண்டாடி வருகிறோம்.
ஆனால் உண்மையில் அவர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நேரங்களில் பொது சமூகமான நாம் அவர்களுக்கு துணை நின்றோமா.? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை கையிலெடுத்தார்களே நினைவிருக்கிறதா.? அவர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகள் நம் செவிகளுக்கு எட்டியதா..?
போராட்டத்தை முன்னிறுத்திய மருத்துவர்கள் பணியிடை மாற்றம் செய்யபட்டனர். பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கு சென்னைக்கும் புதுக்கோட்டைக்கும் அலைந்து போராடியே மனவேதனையில் லட்சுமி நரசிம்மன் என்பவர் உயிரை விட்டது நமது இதயத்தை தொடவே இல்லை.
தற்பொழுது நாடு முழுவதும் நாம் எதிர்கொள்ளும் இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் நம்மை காப்பது அரசு மருத்துவர்களே. தனியார் (கார்ப்பரேட்) மருத்துவமனைகள் அல்ல.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் உள்ளனர். நமக்காக உயிரை பணயம் வைப்பது அரசு மருத்துவர்களே.
தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு என்றே தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதித்தவர்களை அருகாமையில் இருந்து சிகிச்சை அளிப்பதும் அரசு மருத்துவர்களே. அவர்கள் தங்களை பற்றி எப்பொழுதும் கவலைபடுவதில்லை.
முதலில் நோய் பாதித்தவர்கள் குணமாக வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் சேவைகளை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் அரணாய் இருக்க வேண்டியது பொதுமக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமையாக கருத வேண்டும்.
கண் மருத்துவர் லீ வென்லியாங் 33, கொரோனா வைரஸ் பற்றி உலகுக்கு முதலில் தகவலை தெரிவித்தவர். ஆனால் காலச்சூழ்நிலை அந்த மருத்துவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறந்து விட்டார்.
ஒவ்வொருவரையும் ஆபத்தான காலங்களில் மக்களை பாதுகாப்பது அரசு மருத்துவர்கள்தான். அவர்கள் அரசு பணிக்கு வருமுன்னரே உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.
உலகில் எந்த ஒரு ஆபத்தான நோய்கள் பரவினாலும் தங்களின் பணிகளை திறம்பட செய்து, பொதுமக்களை பாதுகாப்பது அரசு மருத்துவர்கள் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.