கொரோனாவால் பாதிப்படைந்த துறைகளுக்கு பொருளாதார உதவி! நிா்மலா சீதாராமன் இன்று செயல் திட்டம் வகுக்கிறார்
கொரோனாவால் பாதிப்படைந்த துறைகளுக்கு பொருளாதார உதவி! நிா்மலா சீதாராமன் இன்று செயல் திட்டம் வகுக்கிறார்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு நிவாரண உதவிகளை அளிப்பது தொடா்பான முடிவுகளை எடுக்க பொருளாதார நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமா் மோடி அநேற்று முன்தினம் தெரிவித்திருந்தாா்.
இதன் அடிப்படையில், கரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நிலவும் மாறுபட்ட சூழலால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து, சுற்றுலா சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உட்பட துறைகளின் அமைச்சா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆலோசனை கூட்டம் நடத்தினாா்.
கூட்டம் முடிந்த பின் அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: கரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த துறைகளின் கோரிக்கைகள் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
நிதியமைச்சக அதிகாரிகளுடன் சனிக்கிழமை ( இன்று ) நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிப்பதற்கான முக்கிய செயல் திட்டம் வகுக்கப்படும் என்றாா் நிா்மலா சீதாராமன்.