Kathir News
Begin typing your search above and press return to search.

'ஸ்ரேஷ்டபாரத்' நிகழ்ச்சியின் மூலம் வடஇந்தியாவிலும் கற்பிக்கப்படும் தமிழ் - இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிலடி.!

'ஸ்ரேஷ்டபாரத்' நிகழ்ச்சியின் மூலம் வடஇந்தியாவிலும் கற்பிக்கப்படும் தமிழ் - இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிலடி.!

ஸ்ரேஷ்டபாரத் நிகழ்ச்சியின் மூலம் வடஇந்தியாவிலும் கற்பிக்கப்படும் தமிழ் - இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிலடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2019 4:39 AM GMT


தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


நம் நாட்டில் கல்வி, அரசு உதவிகள் இல்லாத போதே நாம் வர்த்தக ரீதியாக முன்னிலையில் இருந்தோம். இயற்கையாகவே நம் மரபணுவில் அந்த திறன் இருக்கிறது. நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து தொழில் செய்வதன் மூலம் தான் நம் திறமைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிக்கொண்டு வர முடியும்.


பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சூட்கேஸ் எடுத்து செல்லாதது குறித்து மிகப்பெரிய செய்தியாக பேசப்பட்டது. சூட்கேஸ் என்றதும் வேறு நினைவு தான் எனக்கு வந்தது. சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை. நரேந்திர மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை. அதனால் தான் சூட்கேஸ் எடுத்து செல்லவில்லை.


தொழில் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க முன் வரவேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தொழில் செய்வது மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதை ஊக்குவிக்க நரேந்திர மோடி அரசு எப்போதும் தயாராக உள்ளது.


‘தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு. தமிழகத்தில் எங்கும், எதிலும் இந்தி திணிப்பு இல்லை. நரேந்திர மோடி அரசின் ’ஸ்ரேஷ்டபாரத்’ என்கிற நிகழ்ச்சி மூலம் வட மாநிலத்தில் தமிழ் கற்றுத்தரப்படுகிறது. ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து, யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் அதனை சிறப்பாக செயல் படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மாற்றிய மாநிலங்களும் இங்கு உள்ளது’ என்றார்.


Next Story