நவீன தீண்டாமை யார் கடை பிடிக்கிறார்கள்.. ஸ்டாலினா அல்லது ராமதாஸா.!
நவீன தீண்டாமை யார் கடை பிடிக்கிறார்கள்.. ஸ்டாலினா அல்லது ராமதாஸா.!

நவீன தீண்டாமையை யார் கடை பிடிக்கிறார்கள் என்று தற்போது வெளியான புகைப்படத்தில் இருந்து அனைவருக்கும் புரிந்திருக்கும்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4ம் தேதி தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியானது. இந்த படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் பார்த்தார்.
அப்போது அவர் அருகாமையில் யாரும் அமரவில்லை. இரண்டு இருக்கைகள் தள்ளியே கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
அதிலும் தியேட்டர் முழுவதும் காலியாகவே இருந்தது. 10 பேர் கூட இல்லை என்பதே உண்மை. இவர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனைத்து நன்மைகளும் செய்வது போன்று காட்டிக்கொள்வார்.
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் வெளியில் துடிப்பது போன்று காட்டிக்கொள்வார்.
அதே சமயம் இவர் கடைப்பிடிப்பது எல்லாமே நவீன தீண்டாமைதான். தன்னுடன் அருகில் யாருமே அமராத வகையில் பார்த்துக்கொள்கிறவர் எப்படி அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்லது செய்வார்.
ஆனால் இவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சாதிக்கட்சி தலைவர் என்று சொல்கிறார். அவர்தான் எந்த மக்களிடமும் சாதியை காண்பித்ததில்லை.
இன்றுவரை அப்படிதான் நடந்து வருகிறார். அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரச்சனை என்றால் முதலில் அறிக்கை விடுவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வது என்று இருக்கிறார்.
தற்போது திரௌபதி திரைப்படத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் என்று அனைவரும் மத்தியில் அமர்ந்து பார்த்திருக்கிறார். இவரை சாதிக்கட்சிக்குள் அடைத்து வைத்தது திராவிட கட்சிகளே.
இந்த திரைப்படத்தால் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் என்று சொல்லலாம்.