தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம்.. தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கியது.!
தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம்.. தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கியது.!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்ப்பகுதி நோய், ப்ரூசெலாஸிஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தைப் கடந்த 11.09.2019 அன்று மதுராவில் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டத்தால் நாட்டில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எந்த ஒரு நோய்களும் தாக்காமல் கால்நடைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் 2019-20 ஆண்டிற்கான திட்ட முகாம் தர்மபுரி மாவட்டம் இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட 6 கிராம ஊராட்சியில் 21 நாட்களுக்கு செயல்படுத்தப்படுகின்றது.
அதில் ஒரு பகுதியாக இண்டூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இ.கே.புதூரில் ஊராட்சி தலைவர் சாலா கன்னியப்பன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
இண்டூர் கால்நடை உதவி மருத்துவர் கே.தசரதன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டார்.
இந்த தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கால்நடை உதவி மருத்துவர் தெரிவித்துள்ளார்.