மார்ச் முதல் மே வரை இந்தியாவின் பல பகுதிகளில் வெய்யில் கொளுத்தும்! தமிழகத்தில் எப்படி? வானிலையாளர்கள் எச்சரிக்கை!
மார்ச் முதல் மே வரை இந்தியாவின் பல பகுதிகளில் வெய்யில் கொளுத்தும்! தமிழகத்தில் எப்படி? வானிலையாளர்கள் எச்சரிக்கை!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக வட இந்திய, மேற்கு இந்திய, மத்திய இந்திய பகுதிகளில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக கொளுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கமான அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும்,
இது தவிர பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலை அல்லது சராசரியான வெப்பநிலையே நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப், ஹரியாணா,மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் குஜராத் மற்றும் மகாராஷ்டிரம், கொங்கன், கோவா, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் பகுதிகள், கேரளம் ஆகியவற்றில் வழக்கமான வெப்பநிலையை விட பகல் நேரத்தில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்து காணப்படும்.
இந்த பகுதிகளைத் தவிர்த்து தமிழகம் உட்பட பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலையே நீடிக்கும். அதில் -0.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலை மாறுபடலாம் என்றும் வழக்கத்தைவிட கூடலாம் அல்லது குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinamani pathtirikkai