நாயகனாக விஜயின் மகன், வில்லனாக விஜய் சேதுபதி?
நாயகனாக விஜயின் மகன், வில்லனாக விஜய் சேதுபதி?

தமிழில் முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் விஜய் சேதுபதி, 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் தெலுங்கில் அடெய்டுத்து வைத்தார். அந்த படத்தினை தொடர்ந்து அவரும் தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் சவாலான கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் அந்த படத்தினில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
அவர் அப்படி தெலுங்கில் அவர் நடித்து வரும் திரைப்படம் 'உப்பென்னா' . இந்த படத்தினை பிச்சிபாபு சனா இயக்க கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ், நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகின்றனர். இதில் நாயகியின் தந்தையாக வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படம் கரோனா ஊரடங்கு ரத்தான பின் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளாராம் விஜய் சேதுபதி.
இந்த படத்தினை அவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் நாயகனாக விஜயின் மகனான சஞ்சய் அறிமுகமாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியே நடிப்பார் எனத் தெரிகிறது. விஜய்க்கு வில்லனாக சரி, அவர் மகனுக்கும் வில்லனாக, நாயகியின் தந்தையாக விஜய் சேதுபதி நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?