விரைவில் கொரோனா இல்லாத இடமாகிறது புதுவை.!
விரைவில் கொரோனா இல்லாத இடமாகிறது புதுவை.!

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், புதுச்சேரி மாநிலம் முழுவதும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே அரியாங்குப்பம் பகுதியை சார்ந்த 2 பேர், திருவாண்டார்கோவில் பகுதியை சார்ந்த ஒருவர், மாஹே பகுதியை சார்ந்த ஒருவர் என 4 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
மூலகுளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று இரவு குணமாகி வீடு திரும்பி உள்ளதால், தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவர் உடல்நலம் தேறி வருவதால் அவர்களும் விரைவில் வீடு திரும்பூவார்கள் என்ற தம்பிக்கை உள்ளதாகவும், புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றும். இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த புதுச்சேரி மக்கள், பாடுபட்ட அணைத்து துறை அதிகாரிகள் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.