உடலில் தழும்புகள், முகத்தில் மருவோடு இயல்பாய் இருக்கும் அதிசய நடராஜர்!
உடலில் தழும்புகள், முகத்தில் மருவோடு இயல்பாய் இருக்கும் அதிசய நடராஜர்!

கும்பகோணத்தில் இருந்து வட மட்டம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருநல்லம் எனும் திருத்தலம் . கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள எஸ்.புதூர் எனும் ஊரில் இருந்தும் இத்தலத்திற்கு செல்லலாம் . இத்தலத்தில் உறையும் இறைவன் உமா மகேஷ்வரன் மற்றும் தேகசெளந்தரி ஆவார் . இக்கோயில் சோழ மன்னன் கண்டராதித்யன் மனைவி சோழ மாதேவியால் எழுப்பபட்ட ஆலயம் .
இத்தலத்தில் பூமாதேவி பூஜித்ததால் இவ்விறைவன் பூமிநாதன் என்று அழைக்கபடுகிறார் . மேலும் தன் திருமண கோலத்தை பூமாதேவிக்கு காட்டிய தலமாக இருப்பதால், இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு திருமண தடை எதும் இருப்பின் அது நீங்கிவிடுகிறது .
கெளதம முனிவருக்கு திருநடனம் காட்டிய இடமும் இதுதான் . கோயில் எழும்பிய காலத்தில் நடராஜர் சிலையை வடிக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்த சிற்பியிடம் மாறு வேடத்தில் வந்த சிவன் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார் ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சிற்பி அங்கு கொதித்துக் கொண்டி ருந்த உலோக குழம்பை காட்டி குடிக்க சொன்னார் ஈசனும் அதை அப்படியே எடுத்து குடித்து விட அதிர்ந்த சிற்பி அவனை ஈசன் என்று உணர்ந்து கொண்டான் . குழம்பை குடித்த ஈசன் அப்படியே நடராஜராக உருமாரினார் .
இன்றைக்கும இந்த நடராஜர் சிலையின் கைகளில் ரேகைகளும் உடலில் தழும்புகளும் முகத்தில் மருவும் இயல்பாக அமைய பெற்றிருக்கிறது . பொதுவாக ஆலயங்களில் நான்கு கோஷ்ட மூர்த்திகள் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு மங்கை பங்கர் துர்கை பிட்சாடனர் நான்முகன் விங்கோத்பவர் குரு நடராஜர் விநாயகர் அகத்தியர் என்று ஒன்பது கோஷ்ட மூர்த்திகள் இருப்பது தனி சிறப்பாகும் .
ஈசன் உமை தேவியை திருமணம் செய்து கொண்ட தலமாதலால் ஈசன் சன்னிதியும் உமையவள் சன்னிதியும் எதிர் எதிராக அமைந்துள்ளது . ஜாதகத்தில் திருமண தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நடராஜரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கிறது . இங்குள்ள வைத்தீஸ்வரன் சுவாமி சோழ மன்னனின் குஷ்ட ரோகத்தை குணமாக்கிய வர் . இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆகையால் தீராத நாட்பட்ட வியாதிகள் இவரை வழிபடுவதால் தீர்கிறது. இக்கோயில் காலை 8 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது .