எல் சால்வடார் நாட்டில் தான் இப்படி ஒரு கொரோனா தடுப்பு பணியாம்.!
எல் சால்வடார் நாட்டில் தான் இப்படி ஒரு கொரோனா தடுப்பு பணியாம்.!

எல் சால்வடார் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 20 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். இதையடுத்து எல் சால்வடார் நாட்டின் அதிபர் நாயீப் புக்கேல் நாட்டில் கொரோனா தொற்றை குறைக்கும் விதமாக ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க எல் சால்வடார் நாட்டில் உள்ள சிறை சாலையில் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இசல்கோ சிறைச்சலையில் சிறை அதிகாரிகள் சிறை கைதிகளை சமூக இடைவெளியை பின்பற்றாமல் கைதிகளை விலங்குகளை போன்று சித்ரவதை செய்யும் விதமாக நடத்திய புகைப்படங்கள் சர்வதேச நாளிதழ்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கி விட்டது.
குறுகலான பகுதியில் கைதிகளை ஒருவரோடு ஒருவராக நெருக்கமாக அமரவைத்து பரிசோதனை செய்தது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராகவும் மற்றும் மருத்துவ விதிகளுக்கு எதிராகவும் உள்ளதாக சர்வதேச நாளிதழ்கள் கூறுகின்றன.