ரேஷன் கடையில் 'மோடிதான் நல்லவர்' என்று கூறிய பெண்ணுக்கு பொருள்கள் தர மறுப்பு : ஒருமையில் திட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார்.!
ரேஷன் கடையில் 'மோடிதான் நல்லவர்' என்று கூறிய பெண்ணுக்கு பொருள்கள் தர மறுப்பு : ஒருமையில் திட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது புகார்.!

ராஜஸ்தான் மாநிலம் சித்தூா்கா் மாவட்டத்தில் உள்ள சொனியானா கிராமத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு பிரதமர் அறிவிப்புப்படி ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர சிங் பிதூரி பங்கேற்று பொருள்களை வழங்கினாா்.
அப்போது அவர் பேசும் போது பொதுமக்களை நோக்கி மோடி நல்லவரா அல்லது மாநில முதல்வா் அசோக் கெலாட் நல்லவரா? என்று கேள்வி எழுப்பினாா். கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'மோடிதான் நல்லவா்' என்று யாருக்கும் பயப்படாமல் சுட சுட பதிலளித்தாா்.
இந்த பதிலால் அதிர்ந்துபோன அந்த எம்எல்ஏ அந்த பெண்ணை நோக்கி விரலை நீட்டி, 'நான் கேட்ட கேள்விக்கு நீ..மோடி என்று பதிலளித்துள்ளாய்.. எனவே, நீ வீட்டுக்குச் சென்று மோடி சொன்னது போல விளக்கேத்து ..உனக்கெல்லாம் ரேஷன் பொருள்கள் கிடையாது என ஒருமையில் பேசியுள்ளார். இது தொடா்பான விடியோ வடமாநிலங்களில் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக, மாநில பா.ஜ.க. தலைவா் சதீஸ் பூனியா, காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளாா். காங்கிரஸ் அரசு மக்களிடம் அரசியல்ரீதியாக பாரபட்சம் காட்டுவதற்கு இது சிறந்த உதாரணம் என்று அவா் கூறியுள்ளாா். இது தொடா்பாக எம்எல்ஏ ராஜேந்திர சிங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்க முயற்சித்தபோது, அவா் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
https://www.indiatoday.in/india/story/coronavirus-pm-modi-ashok-gehlot-congress-mla-woman-choose-giving-ration-1668995-2020-04-20