சக்ஸஸ் மந்திரங்களை அறிந்து கொள்வோம்
சக்ஸஸ் மந்திரங்களை அறிந்து கொள்வோம்

உங்களிடமிருக்கும் பலத்திற்க்கு நன்றியுணர்வுடன் இருங்கள்
ஒப்ரா ஒரு முறை சொன்னார், உங்களிடம் இருப்பதற்கு நீங்கள் நன்றியுணர்வுடன் இருங்கள். அந்த உணர்வு அந்த இருப்பை அதிகரிக்கும். உங்களிடம் இல்லாத ஒன்றின் மீது நீங்கள் கவனத்தை குவிக்கிற போது, உங்களிடம் இருப்பது எப்போதும் உங்களுக்கு நிறைவை தராது.
உங்கள் பயம் உங்களை வழிநடத்துவதை அனுமதிக்காதீர்கள்
நாம் மேற்கொள்ளும் விருப்பங்கள் பெரும்பாலும் இரு தன்மைகளால் நிகழ்கிறது. ஒன்று அதீத பற்று மற்றொன்று பயம்.
"ஒருவர் புகழ்பெற்ற மேலாண்மை படிப்பை படிக்க விரும்பி ஆஸ்திரேலியா போன்ற மேலை நாட்டிற்கு செல்கிறார். ஆனால் அங்கு சென்ற சில காலங்களில், பாடத்தின் மீது விருப்பமின்மை தோன்றும் போது, இந்த படிப்பை கைவிட்டால் என் நிலை என்னாவது என்ற பயத்தால் அந்த படிப்பை தொடர்கிறார்."
எனவே பயத்தால் எடுக்கும் முடிவு என்பது வாழ்வின் மீதான பாதுகாப்பற்ற தன்மையினாலும் மற்றும் வாழ்கை ஏற்படுத்தியிருக்கும் பற்றாக்குறையினாலும் நமக்கு நிகழ்வது. இந்த பயத்தால் எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் நம்மை நாம் விரும்பிய இடத்திற்கு கொண்டு செல்வதில்லை.
எனவே விருப்பம், உள்ளாற்றல் இவையிரண்டுமே உங்கள் முடிவினை தீர்மானிப்பதாக பார்த்து கொள்ளுங்கள்.
"செய்திருக்கலாம்" – இந்த வார்த்தையை தவிறுங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடும் போதும் நாம் மனதிற்க்குள்ளாகவே பேச்சிக்கொள்ளும் வார்த்தையில் அதிகம் பயன்படுத்துவது "நான் இதை செய்திருக்கலாம்." "நான் அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்திருக்கலாம்", "நான் வண்டியை ஓட்ட பழகியிருக்கலாம்"
இந்த "..லாம்" என முடியும் சொற்கள் அனைத்தும் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்த கூடியவை. அந்த வார்த்தையை "வேண்டும்" என மாற்றி பாருங்கள். "நான் அறிவியல் பயில வேண்டும்", "நான் வண்டியை ஓட்டி பழக வேண்டும்" இந்த ஒரு வார்த்தை மாற்றம் நம் அதிர்வில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
உங்களை உங்களோடு மட்டுமே ஒப்பிடுங்கள்.
உங்கள் வீட்டின் அருகில் இருப்பவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்ளக்கூடியவர் அதனால் அவரை பார்த்து உங்களை ஒப்பீடு செய்து கொண்டு நீங்களும் காலை 4 மணிக்கு எழ முயன்றால் தோற்றுபோகக்கூடும் காரணம். அவர் ஓய்வு பெற்ற மனிதர் அவர் தினசரி 7 மணிக்கே உறங்க சென்றுவிடுவார். ஆனால் நீங்கள், ஒரு மாணவராகவோ அல்லது ஓர் இளம் பெற்றோராகவோ இருப்பீர்கள் எனில் உங்களின் தினசரி வேலைகளை முடித்து இரவு படுக்கைக்கு செல்ல இரவு 10க்கும் மேல் ஆகலாம். எனில் இந்த ஒப்பீடு எந்த வகையில் சரியானதாகும்.
மாறாக நேற்று காலை நீங்கள் 7 மணிக்கு எழுந்தீர்கள். இன்று நீங்கள் அதற்கு சற்று முன்னதாக 6.30க்கு எழுவீர்களே ஆனால் உங்களை நீங்களே வென்றிருக்கிறீர்கள்.
எனவே ஒப்பீடு என்பதும் போட்டியென்பதும் ஒரு மனிதன் தனக்குள்ளே நிகழ்த்த வேண்டியது, தனக்குத்தானே நிகழ்த்த வேண்டியது நம் முந்தைய சாதனைகளை நாம் முறியடிக்கிற ஒவ்வொறு தருணமும் நம்மை நாமே வென்று கொண்டிருப்பதற்கான அடையாளம்.
எனவே எவரையும் எவரோடும், எதையும் எதனோடும் ஒப்பீடாதீர்கள். அதனுடைய தனித்த இயல்பை, தனிப்பட்ட உணர்வுகளை மதித்து அதனதன் தன்மையில் அதனதன் உள்ளாற்றலின் அடிப்படையில் வளர அனுமதிக்கிற போது அது தரமுள்ள தளிராக வளரும்