Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்கள், இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு!

சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்கள், இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு!

சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்கள், இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 12:55 PM GMT

கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் சுணக்கம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களுக்காக 17,120 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஜப்பானின் ஜீன்ஜோ அபியின் அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்கள் தங்கள் தாய் நாடான ஜப்பானுக்கு மாற்றுவதற்கு 15468 கோடியும் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு நிறுவனங்களை மாற்ற 1652 கோடியும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கணினி உற்பத்தியில் உள்ள ஷார்ப் நிறுவனம், நைன்டென்டோ நிறுவனம் ஆகியவை வியட்நாமிற்கு மாற துவங்கி உள்ளது.

கிழக்கு சீனாவின் கடற்பகுதியில் உள்ள சென்காகு தீவிற்கு 2012 முதல் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் உரிமை போர் உச்சகட்டத்தை அடைந்தது முதல் பல காரணங்கள் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் டோக்கியோ சோகோ என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 2600 நிறுவனங்களில் 37% சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்து உள்ளதாகவும், குளோபல் மேன் கலந்தாய்வு நிறுவனம் தனது 7-வது வர்த்தக ஆண்டின் மறுசீரமைப்பு பட்டியல் வெளியீட்டுள்ளதில் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களும் வெளியேற முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க சீன வர்த்தக போரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை சீனாவில் இருந்து வெளியேற கூறிய போது யோசனை செய்த நிறுவனங்கள் கூட தற்போது வெளியேற முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அப்பிள் ஐ போன் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அதன் பாகங்களை உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் நிறுவனம் இன்னும் ஒரு வருடத்தில் தனது சரிபாதி அளவு உற்பத்தியை வேறு நாட்டிற்கு மாற்ற போவதாகவும் பெரும்பான்மையாக இந்தியாவிற்கு மாற்றலாம் என்று கூறி உள்ளது.

மற்றொரு உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான பேகடான் தைவானிற்கு மாற்றினாலும் இந்தியாவில் உற்பத்தி செய்வதை விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளது. ஹோன்காய் ப்ரீசிஷன், இன்வென்டெக் வியட்நாமிற்கு மாற திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்க சீன வர்த்தக போரில் இந்தியாவிற்கு வர வேண்டிய பல நிறுவனங்கள் வியட்நாமிற்கு மாறிய நிறுவனங்கள் தற்போது இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன.

இங்கு மேற்கோள் காட்டப்பட்ட ஆப்பிள் ஐபோன் மூலம் சீனா கடந்த நிதியாண்டில் 4400 கோடி அமெரிக்க டாலர் வருவாய் அடைந்துள்ளது. இவை அமெரிக்க விமான நிறுவனம், நைக் நிறுவன வருவாயை காட்டிலும் அதிகம். இந்த ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அமைய சீனா 1500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் தொழிற்சாலை கட்டவும், 40 ஆயிரம் தொழிலாளிகள் தங்குமிட வசதியும் 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் புதிய விமான நிலையத்தை உருவாக்கியது.

சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ள நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ள அரசின் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா போன்ற புதிய திட்டங்கள் மூலம் பயன் அடைய, இந்தியாவில் உற்பத்தி செய்வதை விரும்புகின்றன. 2017-ல் இருந்த 1369 ஜப்பானிய நிறுவனங்கள் தற்போது 1441 ஆகவும், குறிப்பாக தென்னிந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த 200 ஜப்பானிய நிறுவனங்கள் தற்போதாக 530 எனவும் உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதால் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவது எளிதாகும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News