சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவு.!
சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவு.!

சென்னை மாநகராட்சியில் இருக்கும் 407 அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் இலவச உணவு அளிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த அறிவிப்பால் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதற்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் ஆகியோரும் உதவி செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், முதல்வரின் உத்தரவால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கும் சேவை செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் இருக்கும் 407 அம்மா உணவகத்தில் இலவச உணவு அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.