பவன் கல்யாணுடன் இணையும் சிவ கார்த்திகேயன்?
பவன் கல்யாணுடன் இணையும் சிவ கார்த்திகேயன்?

இந்திய அளவில் இந்தி திரையுலகிற்கு அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் தான் பெரிய வர்த்தகம் கொண்ட திரையுலகமாகும். ஒரு காலத்தில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும். இங்கும் அதே அளவுக்கான வெற்றியைப் பெறும். நாளடைவில் அது எடுபடாமல் போனது.
நீண்ட காலத்திற்குப் பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றது. தமிழ் நாடு மற்றும் ஆந்திரா கலாச்சாரத்தில் பெரும்பாலும் ஒத்துப் போவதால் தெலுங்கு படங்களுக்கும் தற்போது தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீப காலமாகத் தமிழ் நடிகர்கள் தெலுங்கு படத்தில் நடிப்பது அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் அந்த படங்களின் டப் உரிமை நல்ல விலைக்கு விற்க முடிகிறது, ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழிலிருந்து சமீபத்தில் தெலுங்குக்கு விஜய் சேதுபதி சென்றதைத் தொடர்ந்து சிவ கார்த்திகேயனுக்கும் அழைப்பு வந்துள்ளதாம். க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் மற்றொரு நாயகனாக நடிக்க சிவ கார்த்திகேயனை அணுகியிருக்கிறதாம் படக்குழு. தெலுங்கில் நடிப்பதைப் பற்றி சிவ கார்த்திகேயன் ஆலோசித்து வருவதா கூறப்படுகிறது.