Kathir News
Begin typing your search above and press return to search.

திடீர் திருப்பமாக இயக்குனர் ஆகும் ஜோக்கர் யோகி பாபு?

திடீர் திருப்பமாக இயக்குனர் ஆகும் ஜோக்கர் யோகி பாபு?

திடீர் திருப்பமாக இயக்குனர் ஆகும் ஜோக்கர் யோகி பாபு?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 7:24 AM GMT

சிறிய வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. 'தர்மபிரபு' படத்தின் இயக்குநரான முத்து குமரனும் யோகி பாபுவும் சில வருடங்களுக்கு முன்னர் வரை ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடி வந்தவர்கள். இதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருடன் விவாதித்து திரைக்கதை ஒன்றை தற்போது நிறைவு செய்துள்ளார் யோகி பாபு.

நாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அதற்கு நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதைப் பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். தற்போது அந்த திரைக்கதையைத் தானே இயக்க திட்டமிட்டு வருகிறாராம் யோகி பாபு. இதனால் விரைவில் யோகி பாபு இயக்குநராகிறார். நகைச்சுவை வேடத்தில் நடித்த பல நடிகர்கள் கதாநாயகர்களாக உயர்ந்துள்ளார்கள். ஆனால் இது வரை படம் இயக்கியதில்லை. எனவே இது நடந்தால் நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குநரான உயர்வு பெற்ற பெருமை யோகி பாவுக்கே கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News