மகேஷ் பாபு அம்மாவின் பயோபிக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?
மகேஷ் பாபு அம்மாவின் பயோபிக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

'பணமா பாசமா' படத்தில் இடம்பெற்றுள்ள 'எலந்த பழம்' பாடல் நினைவிருக்கிறதா? அந்த பாடலில் நடனமாடியிருந்த நடிகை தான் விஜய நிர்மலா.
தமிழ் மற்றும் மலையாளத்தில் சுமார் 25 படங்களில் நடித்துள்ளவர், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர், பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருந்த கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தில் மூலம் நரேஷ் எனும் மகன் உள்ளார். அவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்தவர் தான் தற்போது தெலுங்கு சூப்பர்ஸடாராக இருக்கும் மகேஷ்பாபு. கடந்த வருடம் ஜூன் மாதம் விஜய நிர்மலா காலமானார்.
இந்நிலையில் அவரது முதல் மகனான நரேஷ் விஜய நிர்மலாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதில் விஜய் நிர்மலா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சாவித்திரியின் பயோபிக்கில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர் பெற்றதால் கீர்த்தி சுரேஷ் தான் இதில் நடிக்க வேண்டும் எனத் தீர்க்கமாக உள்ளாராம் நரேஷ்.