குடும்ப வன்முறை குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு.!
குடும்ப வன்முறை குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு.!

குடும்ப வன்முறை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவைரஸ் நோய் தொற்றுமக்களிடையே அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் குடும்ப வன்முறை ஏற்பட்டால், அதனை நிவிர்த்தி செய்ய ஏதுவாக அங்கன்வாடிபணியாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாக தற்காலிகமாக பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை தங்கள் வட்டாரத்திலுள்ள குழந்தை வளர்ச்சித் திட்டஅலுவலர்கள் வாயிலாக அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், பாதுகாப்புஅலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூகநலஅலுவலர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே,பொதுமக்கள் தங்களுக்கு எதிராக ஏற்படும் குடும்ப வன்முறைகளை அந்தந்தபகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரம் தெரிவிக்ககேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்கன்வாடி பணியாளர்களின் தொலைபேசி எண்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.