பெங்களூரில் நேற்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை! சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.!
பெங்களூரில் நேற்று முதல் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை! சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.!

கொரோனா எனப்படும் இந்த மோசமான கொள்ளை நோயால் உலக நாடுகள் உட்பட இந்தியாவும் மூச்சு திணறி வருகிறது இதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை நோய்க்கு உரிய மருந்து மாத்திரை எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை இதையடுத்து உலகம் முழுவதும் மாற்று மருந்துகள் கொடுத்து இதை குணப்படுத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர்
இந்த சிகிச்சை நாட்டுக்கு நாடு மாறுபட்டதாக உள்ளது இந் நிலையில் இந்தியாவில் முதன்முறையாக இந்த கொள்ளை நோய்க்கு பிளாஸ்மா சிகிச்சையை கேரளா துவங்கியது. இதில் ஓரளவு பயன் கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனா நோய்க்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியிருக்கிறது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் பிளாஸ்மா சிகிச்சை துவக்கப்பட்டது பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் இந்த சிகிச்சையை சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மருத்துவ கல்வி துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.