வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் உடல் நிலை மிகவும் மோசம் ?
வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் உடல் நிலை மிகவும் மோசம் ?

உலகமே "கொரோனா கொரோனா" என அலறி அடித்து ஓடிகொண்டிருந்த போதும் தனக்கே உரித்தான முறையில் ஏவுகணை சோதனை நடத்தி கொண்டிருந்தார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் ராணுவத்தை தனது தீவிரமான அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் கலங்கடித்து வந்தார். அப்படிபட்ட நபர் எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார் ? என்ற வினா உருவாகிவிட்டது.
வட கொரிய மக்கள் தங்கள் நாட்டு அதிபருக்கு உயிர் இருக்கா? இறந்துவிட்டாரா? என சமூக வலைதளங்கள் மூலம் கேட்டு வருகின்றனர். கிம் ஜாங் உன் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை பெற்று வந்தார். அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யவில்லை என்றும் அவரின் உடல் பருமன் அதிகரித்ததன் விளைவாக வேறு சில நோய் தொற்று ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதால் அவர் இறக்க கூடும் என்கின்றனர்.
இந்த தகவல் இவ்வாறு இருக்க கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அதிபர் பதவியை கைபற்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம் ஜாங் உன் இறுதியாக ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வடகொரிய தந்தை என அழைக்கப்படும் கிம்ன் தாத்தா கிம் இல் சுங்கின் பிறந்த நாள் விழாவில் கிம் கலந்து கொள்ள வில்லை என்பது பெருத்த சந்தேகத்தை உருவாக்கி விட்டுள்ளது .