Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்க அனுமதி தரப்படவில்லை, உள்துறை அமைச்சகம் இன்று மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு.!

ஆன்லைன் நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்க அனுமதி தரப்படவில்லை, உள்துறை அமைச்சகம் இன்று மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு.!

ஆன்லைன் நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்க அனுமதி தரப்படவில்லை, உள்துறை அமைச்சகம் இன்று மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 11:49 AM GMT

கொரோனாவுக்கு எதிரான இந்த ஊரடங்கு காலம் முடியும் வரை ஆன்லைன் நிறுவனங்களால் அத்தியாவசியமற்ற பொருட்கள் வழங்குவதன் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் இந்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை தனது அறிவிப்பில் கறாராக தெரிவித்துள்ளது.


வரும் 20 ந்தேதி முதல் எவை எல்லாம் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை சில தினங்களுக்கு முன் அதன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் பட்டியலில் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அந்த அறிவிப்பில் ஆன்லைன் விற்பனையாளர்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்குவதை வெளிப்படையாக தடை செய்து அறிவிக்கவில்லை என்றும், இதனால் பலர் தவறாக புரிந்து கொண்டு ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மீண்டும் எலக்ட்ரானிக், எலக்ட்ரிக் பொருள்களுக்கு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தொடங்கியதாகவும் செய்திகள் வந்தன. இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தேவையான அனுமதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்று முன்பு கூறியிருந்தது. இதன் அர்த்தம் அத்தியாவசியமற்ற பொருள்கள் விற்பனையை குறிப்பிடவில்லை என்றும் இந்த விதி விலக்கு அத்தியாவசிய பொருள்கள் சேவைக்கு மட்டும்தான் எனவும், ஊரடங்கு அமலில் உள்ளவரை அத்தியாவசியமற்ற பொருள்களை ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் சப்ளை செய்யக் கூடாது என்ற முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என இன்று தெளிவாக தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News