Kathir News
Begin typing your search above and press return to search.

உத்திர பிரதேசத்தில் சவால்கள் மிகுந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதல்வர் யோகி எவ்வாறு சமாளிக்கிறார்? பாடம் கற்று தரும் ஒரு பார்வை!

உத்திர பிரதேசத்தில் சவால்கள் மிகுந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதல்வர் யோகி எவ்வாறு சமாளிக்கிறார்? பாடம் கற்று தரும் ஒரு பார்வை!

உத்திர பிரதேசத்தில் சவால்கள் மிகுந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முதல்வர் யோகி எவ்வாறு சமாளிக்கிறார்? பாடம் கற்று தரும் ஒரு பார்வை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 2:55 AM GMT

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். ஜாதிகளின் ஆதிக்கம், மாபியாக்கள், மத பழமைவாத பிரச்சினைகள் என எப்போதும் பல்வேறு சச்சரவுகளை சமாளிக்கும் மாநிலம். இந்த பிரச்சனைகளை ஏற்கனவே முறியடித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி கண்டு வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் சாதாரண ஏழைகளில் இருந்து வசதியானவர்கள் வரை பாகுபாடுகள் இல்லாத வகையில் கிடைக்க செய்வதில் ஆதித்யநாத் சிறப்பாக பணியாற்றி வருவதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாராட்டி மகிழ்கிறார்.

நம் தலைமுறையின் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றாக விளங்குவது இந்த கொரோனா வைரஸ் தாக்குதலாகும். இது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அசைத்து பார்க்கும் ஒரு கட்டத்தில் நம்மை நிறுத்தியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவலின் இந்த சங்கிலியை உடைப்பதில் உலக மக்கள் தொகையின் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா என்ன செய்கிறது என்பதை இந்த உலகம் உற்று நோக்குகிறது.

இந்த வைரஸ் பரவலை தடுக்க திரு.நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. 21 நாட்கள் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்த காலத்தில் கோடிக்கணக்கான இந்திய மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உண்மையில் இது சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் வசிக்கும் தினக் கூலி தொழிலாளர்களை பெரிய அளவிற்கு தாக்கியுள்ளது, குறைந்த பட்ச சேமிப்பு கூட இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள் அவை.

பெரும்பாலான தொழில்கள், அலுவலகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் தற்போது மூடப்பட்டுள்ளதால், இந்த மக்கள் தங்கள் வயிற்று சோற்றுக்கு கூட சம்பாதிக்க வழி இல்லாமல் உள்ளனர். இந்த சோதனையான நேரத்தில் உ.பி. உட்பட நாட்டில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் இந்த குடிமகன்களை பாதுகாக்க நல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் அவசிய பொருள்கள்

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இங்கு தொற்று நோயைத் தடுக்க வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சாதாரண மனிதர்களுக்கு தினமும் அனைத்து தேவையான பொருட்களையும் கிடைக்கச் செய்ய உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அத்தியாவசியப் பொருட்களை யாரும் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பதை தடுக்கும் பொருட்டு மளிகைப் பொருட்கள் எம்ஆர்பி விலைக்கு உட்பட்டு விற்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 21 நாள் ஊரடங்கு தொடங்கும் முன்பு பிரதமர் மோடி அவர்கள் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்த போது, நிலைமை எங்கே போய் முடியுமோ என பலரும் கவலைப்பட்டனர்.

நகர்ப்புற பகுதிகளில், ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவத் தொடங்கிய பீதியைக் கருத்தில் கொண்டு மாதாந்திர மளிகைப் பொருட்களைப் பெற முடியுமா என மக்கள் ஆச்சரியப்பட்டனர். ஆரம்பத்தில் க்ரோஃபர்ஸ் மற்றும் பிக் பாஸ்கெட் நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு போன்ற சில அடிப்படை பொருட்களை வாங்கி அடுக்கி வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த நிறுவனங்கள், பொருட்களை வழங்க தாமதமாகி விடும் என்று ஒரு மறுப்பை முன் வைத்ததால் திகில் அடைந்த நகர்ப்புற மக்களிடம் பல பொருட்கள் ஏற்கனவே கையிருப்பில் இல்லை. நகர்ப்புற பல்பொருள் அங்காடிகளிலும் பெரும்பாலான பொருட்கள் கையிருப்பில் இல்லை.

யாரும் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஒரு விசித்திரமான சூழ்நிலையில் '21-நாள் ஊரடங்கு' அறிவிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பயந்த மக்கள், பின் அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை என்பதுதான் ஒரு அதிசயம் என்கின்றனர். அங்கு ஒரு ஒரு அபார்ட்மெண்ட்டில்தான் வசிக்கும் இருவர் கூறுகையில் "பால், காய்கறிகள், மருந்துகள் மற்றும் மளிகைக் கடைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் நாள் முழுவதும் கிடைப்பதற்கு வசதியாக திறந்திருந்தன. ஊரடங்கு காலத்தில் சாதாரண மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இது உறுதி செய்யப்பட்டது. எல்லா இடங்களிலும் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க மக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டார்கள்.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், விநியோகச் சங்கிலியில் எங்கும் கள்ள சந்தை உருவாகவில்லை. பொருள்களை வியாபாரிகள் பதுக்க முடியவில்லை. தினசரி பால் விநியோகத்தை பூர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் பால் சப்ளையர்களுடன் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் பால் வேன்கள் மூலம் பால் அனைவரின் வீட்டு வாசலுக்கே தேடி வந்தது. இத்தகைய நடமாடும் வேன்கள் பல்வேறு பகுதிகளுக்கு பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சூப்பர்மார்க்கெட் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கும் டெலிவரி நிறுவனங்களாகிய ஸ்விக்கி, சோமாடோ, பிக் பஜார், ஈஸி டே, ஸ்பென்சர், ஃபேமிலி பஜார் போன்ற அனைத்து நிறுவனங்களின் சேவையும் மக்கள் கேட்கும் வகையில் வழங்க பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வசதியான முறையில் அனைத்து சேவைகளும் கிடைத்து வருகின்றன. தொற்று அபாயம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் போலீசார் ஆலோசனைகளை கூறியதுடன், பல தடுப்புகளையும் கடைகளில் செய்திருந்தனர். போலீசார் நல்ல முறையில் இதற்காக அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்." என்கிறார்.

விழிப்புணர்வு அரசாங்கம்

சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது ஒரு சிறிய விஷயமாகக் கூட தெரியலாம். ஆனால் சட்டம் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வது எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒரு மிகப்பெரிய சவாலாகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் யோகி அரசாங்கம் எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பளிக்காமல் பார்த்துக் கொள்கிறது. காய்கறி விற்பனையாளர்கள் முகமூடி இல்லாவிட்டால் தங்கள் வாயையும் மூக்கையும் குறைந்தபட்சம் ஒரு துணியால் மூடிகொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக போலீஸ் ரோந்து சீரான இடைவெளியில் செய்யப்படுகிறது. விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவரும் தங்களுக்குள் பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பதை காவல்துறை தொடர்ந்து உறுதி செய்கிறது.

பொது மக்களின் எந்தவொரு தேவையற்ற நடமாட்டத்தையும் தவிர்க்க ஒவ்வொரு பகுதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில், எனது 10 மாத குழந்தைக்கு கண்களில் அரிப்பு ஏற்பட்ட போது, நாங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தது, எனவே எங்கள் இடத்தில் இருந்து வெளியேறினோம். ஆனால், நாங்கள் வெளியே வந்த போது அதே இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம், வெளியே வந்ததற்கான காரணம் கேட்கப்பட்டது. அவசரத்தை விளக்கிய பிறகு, அதிக கேள்விகள் எதுவும் இல்லாமல் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. டாக்டரின் கிளினிக்கிற்கு செல்லும் வழியில் நாங்கள் பல போலீஸ் ரோந்து வேன்கள் மற்றும் பைக்குகளை கடந்து சென்றோம். கொரோனா வைரஸ் பீதி மற்றும் அதன் சமூக பரவலைத் தடுக்க உததரபிரதேச அரசு உண்மையில் ஒரு சிறந்த வேலையைச் அங்கு செய்து வருகிறது என்பதை அப்போது உணர முடிந்தது என்கிறார் ஹரிஷங்கர் சிங்.

வருமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின் மீது பரிவுடன் கவனம்

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் சமூகத்தின் ஏழை மக்கள் தினசரி உணவு மற்றும் பிற தேவையான பொருட்களைப் பெறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஏழைகளுக்கு ₹1,000 தொகையை வழங்கிய யோகி ஆதித்யனாத் இந்த மக்களின் வீட்டு உரிமையாளர்களிடம் மாத வாடகையை தள்ளுபடி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தாலும் தண்ணீர் மற்றும் மின்சாரம் அவர்களுக்கு கிடைக்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் எந்தவொரு பிரச்சினையையும் அவர்கள் எதிர்க்கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு நபரின் முழுப் பொறுப்பையும் அவர் தனது கைகளில் எடுத்துள்ளார்.

மக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் நடவடிக்கையில், பால், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் இங்கே ஒரு வலுவான விநியோக முறையை உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் தற்போது வரை தினசரி வழங்கப்படுகிறது. அரசு தனது பொது விநியோக (பி.டி.எஸ்) நெட்வொர்க் மூலம் மாநிலத்தில் பல கோடி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அந்தியோதயா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ஏழை பயனாளிகளுக்கும் உணவு தானியங்களை இதுவரை விநியோகித்துள்ளது.

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் வீடு திரும்ப உதவி

வெளி மாநிலங்களில் இருந்து உத்திர பிரதேசம் திரும்பும் மக்கள் டெல்லி நகரின் வழியாகவே பெரும்பாலோர் வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் படிப்படியாக அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்காத டெல்லி ஆம் ஆத்மி அரசு, அவர்களை ஒரே இடத்தில் ஓன்று கூட வைத்து யோகி அரசுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க முனைந்தது. டெல்லி அரசாங்கத்தின் இந்த தவறான எண்ணத்தால் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் பிற ஏழை மக்கள் டெல்லி - உ.பி. எல்லையில் போக்குவரத்து வசதி இல்லாமல் தவித்தனர். டெல்லி அரசாங்கம் அவர்களை டெல்லி அரசு பேருந்துகளில் எல்லை வரை ஏற்றிச் சென்று அத்துடன் தங்களைத் தற்காத்துக் கொண்டது.

இந்த சவாலை எதிர்கொண்ட யோகி அரசாங்கம் சிக்கித்தவித்த பல்லாயிரம் மக்களை உடனடியாக அந்தந்த இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஏற்பாடு செய்தது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமும், போலீசார் மூலமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்தனர்.

இதற்கு முன்பாக உத்திர பிரதேச எல்லையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் குழு தயாராக வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து வரும் அந்தத் தொழிலாளர்களின் உடல் நிலை மற்றும் பிற அறிகுறிகள் குறித்து பரிசோதிக்கப்பட்டன. சந்தேகப்படும் சில அறிகுறிகள் உள்ள எவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வளவு மிகப்பெரிய பணியை ஒரு நாளில், ஒரே இரவில் யோகி அரசு நிறைவேற்றியது.

தனிமைப்படுத்தும் மையங்கள் அமைப்பதில் சவால்

கொரோனா வைரஸ் தொற்று நோயால், பாதிக்கப்படும் அபாயம் கொண்ட நிலையில் வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் வந்த நிலையில் அது ஒரு மிகப்பெரிய சவாலாக அரசுக்கு இருந்தது. இந்த நிலையில் ஆச்சரியப்படும் வகையில் உத்திர பிரதேச அரசு லக்னோவின் 210 படுக்கைகள் கொண்ட சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையை உடனடியாக விரிவாக்கம் செய்து 5000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை உடனடியாக செய்தது. இந்த மருத்துவமனையை மேலும் 15,000 பேர் சிகிச்சை பெறும் வகையில் விரிவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், நர்சுகள் உட்பட சுகாதார பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களையும், பல ஹோட்டல்களையும் ஏற்பாடு செய்து கவனித்து வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தை மிக சிறப்பாக நிர்வகித்து வரும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பல்வேறு குடிமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில் பலரும் அவசர நிலையை யோகி மிக சிறப்பாக கையாண்டதாகக் கூறுகின்றனர். லக்னோவில் கோமதி நகரில் வசிக்கும் ராகுல் குப்தா என்பவர் கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட அளவிலேயே அனைத்து பொருள்கள், வசதிகள் கிடைக்கும் நிலையில் அனைவருக்கும் அந்த வசதிகளை கொண்டு செல்வதில் யோகி அரசு சிறந்த களப்பணி ஆற்றியுள்ளது.

சிறந்த முறையில் சட்டம் – ஒழுங்கையும் பராமரித்தது, மேலும் பால், மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்குவதை அவர் உறுதி செய்துள்ளார். அதற்காக முதல்வர் யோகிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார். மேலும், தேவைப்படுபவர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய ராகுல், "உணவு இல்லாமல் இங்கு யாரும் தூங்குவதில்லை, இதற்கான பொது சமையலறைகளை உருவாக்கி உணவுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ள அவர் இந்த மிகவும் போற்றப்படக் கூடியவர், அவரை நாங்கள் முதல்வராக அடைந்தது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்" என்று மீண்டும் ஒரு முறை கூறினார்.

லக்னோவில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில் "அனைத்து குடிமக்களுக்கும் உறுதியளிக்கும் வகையில் ஏராளமான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைக்க உத்திர பிரதேச அரசாங்கம் மேற்கொண்ட மின்னல் வேக பணிகளால் தான் ஈர்க்கப்பட்டதாக" கூறினார்.

"ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக மாநிலத்திற்குள் யோகி அரசு சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்திய விதம் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க உத்திர பிரதேச அரசு எந்த சவாலையும் சமாளிக்கும் தயார் நிலையைக் காட்டியுள்ளது. மாநிலத்திற்கு வெளியே உள்ள இடங்களில் சிக்கித் தவிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ தனி பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி தென்பட்ட பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் போதுமான அளவில் அமைக்கப்பட்டுள்ளன" என்கிறார் லக்னோவில் உள்ள கோமதி நகர் எக்ஸ்டனில் வசிக்கும் ராகேஷ் வர்மா.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் கொரோனா நோயை பரவாமல் தடுக்கவும், பரவியவர்களுக்கு சிகிச்சை தரவும் இது போன்ற கடினமான பொறுப்புகளை தங்கள் முதுகில் சுமக்கும் வேளையில், பொறுப்புள்ள குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டிய ஒரே கடமை குறைந்தபட்சம் வீட்டிற்குள்ளேயே இருப்பதன் மூலம் நம் பங்கைச் செய்ய வேண்டும், இது பரவலைத் தடுக்க பெரிதும் உதவும் என்கிறார் இந்த கட்டுரையின் ஆசிரியரும், லக்னோவில் வசிக்கும் குடிமகன்களில் ஒருவரான ஹரிஷங்கர் சிங்.

The article largely based on a piece published in Organiser.

Next Story