தர்மபுரியில் கொரோனா நிவாரண உதவி, அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சேர்க்கும் இளம் பஞ்சாயத்து தலைவர்.!
தர்மபுரியில் கொரோனா நிவாரண உதவி, அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சேர்க்கும் இளம் பஞ்சாயத்து தலைவர்.!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமைப்புச்சாரா தொழிலார்களுக்கு அமைச்சர் முதல் பஞ்சாயத்து தலைவர்கள் வரை தமிழக அரசின் நலத்திடங்களை தொடர்ந்து செய்து வருகினறனர்.
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1000 வீதம் 2 மாதங்களுக்கு அறிவித்தார்.
அது மட்டுமின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரபையன அள்ளி ஊராட்சி தலைவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் கொரோனா நிவாரண பொருட்களை ஏழை, எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திறமையாக செயல்பட்டு வருகின்றார்.
முதற்கட்டமாக நெக்குந்தி, முத்தப்பநகர் , சந்தாரப்பட்டி, கெட்டு அள்ளி, கருபையன அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் 500 பேருக்கு 15கிலோஅரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் அவர்கள் நலத்திட்ட நிவாரணப் பொருட்கள் தொகுப்பினை துவக்கி வைத்தார்.
உடன் துணை தலைவர் ரஞ்சித் குமார், ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், தன்னார்வலர்கள் முனுசாமி, ஆனந்த் செல்வன், முருகேசன், கிருஷ்ணன், மணி, மாது, சித்துராஜ், குமார், விஜயாமகேந்திரன், சின்னசாமி, ராஜேந்திரன், பெருமாள், பிரசாந்த் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.