Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கர்கள் உணர்த்தும் டிரம்ப்பை விட சிறந்த மோடியின் நிர்வாகம்!

அமெரிக்கர்கள் உணர்த்தும் டிரம்ப்பை விட சிறந்த மோடியின் நிர்வாகம்!

அமெரிக்கர்கள் உணர்த்தும் டிரம்ப்பை விட சிறந்த மோடியின் நிர்வாகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 8:04 AM GMT

இந்தியாவிற்கு வந்த அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப அமெரிக்க அரசாங்கம் சிறப்பு ஏற்பாடுகள் செய்த போதும் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பாமல் இந்தியாவிலேயே தங்க முடிவு செய்துள்ளது சீன வைரஸ் கிருமியான கொரோனா நோய் தொற்றின் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்காவை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.

சுற்றுலா, வர்த்தகம் என அமெரிக்க குடிமக்களும், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களும் 30,000 பேர் தெற்கு ஆசியாவில் தற்போது இருப்பதாகவும் அதில் குறிப்பாக இந்தியாவில் 9,000 மேல் இருப்பதாக தெரிகிறது.

நோய் தொற்றின் பாதிப்பு உலகின் இரண்டாவது பெரிய ஜனத்தொகை கொண்டு நெருக்கமான வாழ்க்கையில் இந்தியா அமெரிக்காவை காட்டிலும் பல மடங்கு குறைவு. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவில் இறந்து வரும் நிலையில் இந்தியாவில் இதுவரை இறப்பு எண்ணிக்கை 200 என்ற அளவில் உள்ளது அமெரிக்கர்களை இந்தியாவை மேலும் பாதுகாப்பாக உணர வைத்துள்ளது.

நோயின் தீவிரத்தன்மை குறைக்க உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பெற அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் நாடிய பின் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தி அமெரிக்கா கேட்ட 40 லட்ச மாத்திரைகளுக்கு 35.82 மாத்திரைகளும் 9 மெட்ரிக் டன் API (Active pharmaceutical ingredients) என்னும் மருத்துவ மூலக்கூறுகளை வழங்கியது. இந்நிலையில் நோய் தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப செயற்கை சுவாச கருவிகளின் எண்ணிக்கை அளவு இல்லை என்பது அமெரிக்கர்களை அதிர வைத்ததுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 10 வருடத்திற்கு மேலாக இழுபறியில் நீடிக்கும் செயற்கை சுவாச கருவிகளின் கொள்முதல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்ரா திட்டம் என்ற பெயரில் 2006-ல் துவங்கப்பட்ட திட்டம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சுவாச கருவிகளை 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஏற்ப மாற்றி அமைத்து அவற்றை ஆயிரக்கணக்கான கருவிகளை உற்பத்தி செய்ய கொள்முதல் செய்ய உடன்படிக்கை எடுத்து விலையை 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு குறைத்தது.

குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் சிக்கல் ஒரு புறம் இதுவரை ஒரு கருவியை கூட உற்பத்தி செய்து தராமல் இருக்கும் உடன்படிக்கை மேற்கொண்ட கலிபோர்னியாவில் உள்ள கோஸ்டா மெசாவில் செயல்படும் சிறிய ஜப்பானிய நிறுவனமான நியூ போர்ட் மருத்துவ நிறுவனம் மறுபுறம் என சோதிக்க தொடங்கி உள்ளது.

டச் நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனத்திடம் இந்த ஆண்டின் மத்தியில் 10 ஆயிரம் கருவிகள் உற்பத்தி செய்து தர உடன்படிக்கை மேற்கொண்ட நிலையில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும் வென்டெக் நிறுவனமும் கைகோர்த்து உற்பத்தியை துவங்க உள்ளது. மெட்ரானிக் பி எல் சி உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து மே மாதம் 8 தேதியில் 6190 கருவிகளும் ஜுன் மாதம் முதல் தேதியில் 29510 உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே உள்ள கருவிகளை பராமரிப்பு மேற்கொள்ள அகிலிடி நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இழுபறியில் இருந்தால் பெரும்பாலான சுவாச கருவிகள் பயனற்று உள்ளதாகவும் கலிபோர்னியாவில் 170 சுவாச கருவிகள் உடைந்த நிலையில் இருப்பதாகவும் தற்போது அவரச நிலையில் வழங்கப்படும் கருவிகளை பெற மாகாணங்கள் இடையே போட்டி நிலவுகிறது.

இலிநாய்ஸ் மாகாணத்திற்கு கேட்ட 4000 க்கு 450, நியூ ஜெர்சி மாகாணம் கேட்ட 2300-க்கு 300, நியூ மெக்சிகோவிற்கு 370, வெர்ஜினியா மாகாணம் கேட்ட 350-க்கு பூஜ்யம் என்ற அளவில் சுவாச கருவிகள் வழங்கப்பட்டதுள்ளது.

இவை எல்லாம் அமெரிக்கர்கள் மத்தியில் நெருக்கடியை தந்துள்ளன இந்த சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள 9000 அமெரிக்கர்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது. 1300 பேரை இந்த வாரத்தில் அழைத்து செல்ல 5 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு & மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க அரசின் துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் 800 இருக்கைகளுக்கு முன்பதிவு துவங்கிய போது 10 இருக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டன என்றும் வரும் காலத்தில் அமெரிக்கா திரும்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளுமா என்ற நிலையில் குறைந்த அளவிலான அமெரிக்கர்கள் அமெரிக்கா திரும்ப விரும்பி உள்ளனர் என்று அமெரிக்க தூதரக உறவுகளுக்கான முதன்மை துணை செயலாளர் ப்ரவுன் லீ தெரிவித்துள்ளார்.

இவை நோய் தொற்று காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தை விட இந்தியாவின் மோடி அரசின் நிர்வாகம் சிறப்பாக உள்ளது என்பதை அமெரிக்கர்களே உணர்ந்து உள்ளதை வெளிக்கொண்டு வந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News