மும்பை அரசியலிலிலும் புகுந்து விளையாடும் கொரோனா : உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தப்புமா ?
மும்பை அரசியலிலிலும் புகுந்து விளையாடும் கொரோனா : உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தப்புமா ?

மகாராஷ்ட்ராவில் பாஜக முதல்வராக பதவி வகித்த தேவேந்திர பட்நாவிஸ் தனது 5 ஆண்டுகளையும் பயன்படுத்தி மிக சிறப்பாக ஆட்சி செய்தார். இவர் அமல் படுத்திய பல நல வாழ்வு திட்டங்கள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
பிரதமரின் வீட்டு வசதி திட்டங்கள், குறிப்பாக மெகா சிட்டி திட்டங்களை இந்தியாவில் வேறு யாருமே செய்யாத அளவில் அமல்படுத்தினார். சாதாரண நகராட்சிகள் கூட ஒரு மாநகராட்சியின் வசதிகளைப் பெற்றன. விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன விதர்பா பகுதியில் இவரது ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் விட மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தினார். பயங்கரவாதம், குண்டர்களின் அட்டகாசம், நிழல் உலக மாபியாக்களின் அட்டகாசம் இவை எல்லாம் இல்லாமல் செய்தார். மும்பை பயங்கரவாதத்தின் வேரை அறுத்தார்.
இந்த நிலையில்தான் 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மேலிடம் இவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. ஆனால் இதை சிவசேனா ஏற்கவில்லை, ஏனெனில் தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வரானால் தங்கள் கட்சி செல்வாக்கிழந்து போகும், மேலும் தங்களால் மாநிலத்தில் கட்டப் பஞ்சாயத்து அரசியல் செய்ய முடியாது என நினைத்த சிவசேனா தலைவர்கள் பாஜக மூத்த தலைவர்களை நேரில் பார்த்து முதல்வர் வேட்பாளரை மாற்ற முயற்சி செய்தது. ஆனால் பாஜக தலைவர்கள் இதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நடைபெற்ற 2019 சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களை பெற்றும், சிவசேனா தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வராவதை விரும்பாமல் முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என கூட்டணி ஒப்பந்தத்தை மீறி அடம் பிடித்தது. பாஜக மேலிடம் ஒத்துவரவில்லை என்பதால் தங்கள் ஒரிஜனல் பகைவர்களான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரசிடம் சரண் அடைந்து முதல்வர் பதவிக்காக எதிரிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை உருவாக்கினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தான் நினைத்தபடி உத்தவ் தாக்கரே சென்ற நவம்பர் 28 ம் தேதி முதல்வராகவும் ஆகிவிட்டார்.
ஆனால் அவர் ஆட்சி அமைத்து முதல்வராகி 5 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்துக்குள் அதாவது மே- 28 க்குள் அவர் எம் எல் ஏ ஆகவேண்டும், அல்லது எம் எல் சி யாக வேண்டும். ஆனால் இந்த 2 தேர்தல்களையும் கொரோனா கிருமி நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் இவர் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவர்னர் 2 எம்எல்சி க்களை சொந்த விருப்பத்தின் படி நியமனம் செய்யலாம் என்கிற சட்ட விதிகள் உள்ளன. இப்போது அதைப் பயன்படுத்தி தன்னை எம் எல் சி யாக ஆக்குமாறு உததவ் தாக்கரே பாஜக மேலிடத்தில் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு பாஜக மேலிடம் நாடு முழுவதும் கொரோனா அவஸ்தையில் இருக்கும் போது இதெல்லாம் ஒரு மிகப் பெரிய மேட்டரா ? எனக் கேட்டு விட்டதாம் . பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டதாம். நன்றி கெட்டு கூடாதவர்களுடன் கூடி பாஜகவையும், வாக்களித்த மக்களையும் ஏமாற்றியவர்களுக்கு உதவலாமா என சில மாநில பாஜக தலைவர்கள் கேட்கிறார்களாம். இந்த நிலையில் கஷ்டப்பட்டு, கண்ட எதிரிகளின் காலில் விழுந்து சம்பாதித்த முதல்வர் பதவி எங்கே தன்னை விட்டு போய் விடுமோ என்று உத்தவ் தாக்கரே புலம்ப ஆரம்பித்து விட்டாராம்.
இந்த நிலையில் முதல்வர் பதவியை பறிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும், அப்படி பதவி போனால் ஆந்திராவில் என்.டி .ராமராவ் இந்திரா காந்தியை எதிர்த்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது போல உத்தவ் தாக்கரே வருவார் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவூத் கூறியுள்ளார். இதை கேட்டு கொரோனா வைரஸ்கள் வாய்விட்டு பயங்கரமாக சிரிக்கிறதாம்..