தொடர்ந்து போலி செய்திகளை பரப்பும் தீக்கதிர் ஊடகம் - தற்போது பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குறித்து!
தொடர்ந்து போலி செய்திகளை பரப்பும் தீக்கதிர் ஊடகம் - தற்போது பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குறித்து!

தொடர்ந்து போலி செய்திகளை பரப்பும் ஊடகம் தீக்கதிர். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த ஊடகம், அவர்கள் தலைவர்கள் போலவே நித்தமும் பொய் பரப்புவதை வாடிக்கையாக வைத்து இருப்பதால், மக்கள் ஆதரவு சிறிதும் இன்றி, உண்டியலை குலுக்கி மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இன்று அவர்கள் முகநூல் பக்கத்தில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் இந்தியர்களை நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தந்தி தொலைகாட்சி வெளியிட்டது போல பேலி போட்டோஷாப் பதிவை போட்டுள்ளது.
அந்த பதிவின் முகநூல் லிங்க்.
பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அதுபோன்ற ஒரு வேண்டுகோளை வைக்காத போது, தந்தி தொலைகாட்சி அவ்வாறு ஒரு செய்தியை வெளியிடாத போது கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற கீழ்த்தரமான வேலையில் தனது ஊடகம் தீக்கதிர் மூலம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில் தந்தி தொலைகாட்சியும் இந்த பதிவு போலியானது என உறுதிப்படுத்தியுள்ளது.
— Thanthi TV (@ThanthiTV) April 7, ௨௦௨௦
மன்னிப்பு கேட்குமா தீக்கதிர் அல்லது எப்போதும் போல ஒன்றும் நடக்காதது போல கடந்து செல்லுமா?