தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் வலியுறுத்தல்.!
தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் வலியுறுத்தல்.!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசும் போது பிரதமரும் முதல்வரும் பிச்சை எடுக்கிறார்கள் என தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார் இதற்கு தயாநிதிமாறன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என கூறியிருந்தேன் ஆனால் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை
திமுக தலைவர் ஸ்டாலின் தயாநிதிமாறனை கண்டிக்க வேண்டும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை வேடிக்கை பார்பது அரசியல் நாகரீகமா என திமுக தலைவர் ஸ்டாலின் உணரவேண்டும்
பேரிடர் காலங்களில் பிரதமர் முதல்வர் நிவாரண நிதியுதவி பெறுவது பிச்சைஎடுப்பதாகாது
திமுக மாவட்ட வாரியாக கட்சி வளர்ச்சி நிதி என்று பெறுவதை என்ன வென்று கூறுவது திமுக ஆட்சியில் இருந்தபோது பேரிடர் காலங்களில் நிதியுதவி பெற்ற வரலாறு இருகிறது என்பதை திமுக உணரவேண்டும்
திமுக வரும் காலங்களில் எவ்விதமான நிதியும் பெறமாட்டோம் என்று அறிவிக்க முடியுமா? என பாஜக தலைவர் முருகன் வினவியுள்ளார்
மக்களுக்கா நிவாரண உதவி கேட்பதை பிச்சை என்று ஆணவத்துடன் கூறும் தயாநிதிமாறனை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்