Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவிலும் குளிர் காயும் நாடக காதல் குரூப்ஸ், மோகன் ஜியின் முகநூல் போன்று போலியாக பரப்பும் அவலம்.!

கொரோனாவிலும் குளிர் காயும் நாடக காதல் குரூப்ஸ், மோகன் ஜியின் முகநூல் போன்று போலியாக பரப்பும் அவலம்.!

கொரோனாவிலும் குளிர் காயும் நாடக காதல் குரூப்ஸ், மோகன் ஜியின் முகநூல் போன்று போலியாக பரப்பும் அவலம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 April 2020 7:34 AM GMT

திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி பெயரில் போலீயான முகநூல் பதிவு ஒன்று பரவி வருகின்றது.

அதில் வீர சத்ரியர்களே! நாம் அக்னி தீ பிழம்பில் இருந்து பிறந்தவர்கள். சத்ரிய வம்சமான நம்மை கொரோனா என்ன அதைவிட கொடிய நோய்கள் கூட தாக்காது அது நம்மை கண்டு அஞ்சி நடுங்கும். நாடக காதல் கும்பலை போல் பயந்து நடுங்காமல் திரௌபதியாக இருங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவிற்கு இயக்குனர் மோகன் ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அது என்னுடைய சமூக வலைதள பக்கம் அல்ல. போலி என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி தினமலர் செய்தி தாளில் வந்துள்ளதை தனது முகநூல் பக்கத்தில் சுட்டி காட்டியுள்ளார்.

இது போன்று மிகவும் தரம் தாழ்ந்து நாடக காதல் குரூப்பை சேர்ந்தவர்கள் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உலகமே கொரோனா நோய் தொற்றை பார்த்து பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. ஆனால் நாடக காதல் செய்பவர்கள் சாதி ரீதியில் தவறான தகவலை பரப்பி வருவது மிகவும் துரதிஷ்டம் என்று கூறலாம்.

அரசு சொல்வதை கேக்காமல் ஊர் ஊராக சுற்றி திரிபவர்கள் இந்த கொரோனா ஊரடங்கை மதித்து ஒழுக்கமாக வீட்டில் இருந்தால் அனைவருக்கும் நல்லது.

Next Story