Kathir News
Begin typing your search above and press return to search.

உடல்களை அடக்கம் செய்ய ஆட்கள் வராததால் வீதியோரம் போடப்படும் பிணங்கள் ! ஈகுவடார் நாட்டில் பரிதாபம்..

உடல்களை அடக்கம் செய்ய ஆட்கள் வராததால் வீதியோரம் போடப்படும் பிணங்கள் ! ஈகுவடார் நாட்டில் பரிதாபம்..

உடல்களை அடக்கம் செய்ய ஆட்கள் வராததால் வீதியோரம் போடப்படும் பிணங்கள் ! ஈகுவடார் நாட்டில் பரிதாபம்..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 2:01 PM GMT

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ளது ஈகுவடார். போதிய வளர்ச்சி அடையாத இந்த நாட்டில் இங்கு கொரோனாவால் 3 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 172 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆள்கள் தொற்றுக்கு பயந்து முன்வராத காரணத்தினால், வீதிகளில் சடலங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைத்து ஆஸ்பத்திரிக்கு வெளியிலேயே சாலையோரத்தில் விட்டு விட்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தினாலும் பல நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். இதில் சிலரது சடலங்கள் வீதிகளில் நெகிழி பைகள் மூலம் சுற்றி வைக்கப்பட்டு அடக்கத்துக்காக காத்திருப்பதாகவும், சில பேர் வீடுகளுக்குள்ளும், மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்தபோதும் உயிரிழந்துள்ளதாக சோகமான செய்திகள் வந்துள்ளன

Courtesy

www.newstm.in/tamilnadu/coronal-atrocities-bodies-thrown-in-the-streets-without/c77058-w2931-cid530695-s11189.htmpr

Next Story