தர்மபுரியில் கிராமம் கிராமமாக செல்லும் நடமாடும் காய்கறி வாகனம், வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை அசத்தல்.!
தர்மபுரியில் கிராமம் கிராமமாக செல்லும் நடமாடும் காய்கறி வாகனம், வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை அசத்தல்.!

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதில் முதன்மையானது பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடமாடும் காய்கறி அங்காடியை திறந்து வைத்தார்.
உழவர் சந்தையில் என்ன விலை இருக்குமோ அதே விலை நடமாடும் காய்கறி அங்காடியில் விற்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சுப்ரமணிய சிவா கூட்டுப்பண்ணையம் சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி வாகனம் நல்லம்பள்ளி தாலுகா உட்பட்ட பாலவாடி கிராமத்திற்கு சென்றது.
இந்த அங்காடியில் கிராம மக்கள் பலர் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: நாங்கள் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாரத்திற்கு ஒரு முறை சந்தையில் காய்கறிகளை வாங்கி வருவோம்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
எனவே சந்தை கூடுவது தடை பட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய பொருட்களை எப்படி வாங்குவது என்று இருந்தோம்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடமாடும் காய்கறி அங்காடி தற்போது பயனுள்ளதாக அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினர்.
மேலும், மாவட்டம் முழுவதும் நடமாடும் காய்கறி அங்காடி செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.