எப்படி தான் உங்களுக்கு கள்ளத்தனமாக விற்க சாராயம் கிடைக்குது.!
எப்படி தான் உங்களுக்கு கள்ளத்தனமாக விற்க சாராயம் கிடைக்குது.!

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக அனைத்து மதுபானம் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளது ம் மேலும் சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு சுனாமி குயிருப்புப் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிக்குச் விரைந்து சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அருள்தாஸ், ஏசுதாஸ், செந்தில்குமார் ஆகிய 3பேரும் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் காரைக்கால் மேடு பகுதியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட ஒரு சாரயக் கடையிலிருந்து சாராயத்தை கொண்டு வந்து விற்றதும், இதற்கு கடை ஊழியர்கள் கனகராஜ், சுப்ரமணியன் ஆகிய 2 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.