Kathir News
Begin typing your search above and press return to search.

ஊராட்சியில் துாய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது..

ஊராட்சியில் துாய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது..

ஊராட்சியில் துாய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 2:26 PM GMT

வடக்குத்து ஊராட்சியில் துாய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது

முன்னாள் தலைவர் ஜெகன் வழங்கினார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வடக்குத்து ஊராட்சியின் துாய்மை காவலர்களை ரோட்டரி சங்கத்தின் சார்பில்

கௌரவித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

வடக்குத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் உறுப்பினரும், கேசினோ பேக்கரியின்

உரிமம்தாரருமான ராஜகோபால்-பத்மபிரியா சார்பில் ஊராட்சியின் துாய்மை

காவலர்கள் 36 பேருக்கு 5 கிலோ அரிசி, ரூ.200 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு பை,

முககவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதற்கு ரோட்டரி சங்க தலைவர் மணிமேகலை செல்வராஜ் தலைமை தாங்கினார்.

ஊராட்சி துணைத்தலைவர் சடையப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு

அழைப்பாளராக வடக்குத்து ஊராட்சி முன்னாள் தலைவரும், ரோட்டரி சாசன

தலைவருமான கோ.ஜெகன் கலந்து கொண்டு காவலர்களுக்கு அத்தியாவசிய

பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற

உறுப்பினர்கள் ரேவதி செந்தில், டாக்டர்.மணிகண்டன், விஜயநாதன் ஊராட்சி

செயலாளர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாகவே கொரானா

ஒழிப்பிற்கான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

படவிளக்கம்: 51174

வடக்குத்து ஊராட்சியில் துாய்மை காவலர்கள் கௌரவிக்கப்பட்டு, அத்தியாசிய

பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரோட்டரி சார்பில்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News