Kathir News
Begin typing your search above and press return to search.

விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?

விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?

விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 8:00 AM GMT

விலை மதிப்பற்ற மூன்று மனித உயிர்களை காவு வாங்கிய தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுவது தான் ஊடக தர்மமா?

கடலூர் மாவட்ட ஊடக துறையினரின் செயலால் தொடரும் சமூக அவலங்கள்

உண்மையை வெளிகொனற மறுக்கும் ஊடகங்களால் மக்களுக்கும் நன்மை பயக்காது? ஊடகத்துறைக்கும் நன்மை பயக்காது? தவறை சுட்டி காட்ட வேண்டியது ஊடகத்தின் கடமை என்பதை உணரவேண்டும்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது தற்போதைய அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் சாமானியனுக்கு நன்மை பயக்குமா?என்றால் இல்லவே இல்லை என்கிறது சமூகம்

கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26). நண்பர்களான இவர்கள் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிக்க வழியில்லாமல் தவியாய் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களாக பல இடங்களில் இந்த நண்பர் கூட்டம் எங்காவது மது கிடைக்குமா? என்று கேட்டு அலைந்து திரிந்துள்ளது.

இந்நிலையில் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நண்பர் குழுவை சேர்ந்த குமரேசன் தன் சக நண்பர்களின் அவசர தேவையை பூர்த்தி செய்ய விரும்பி தான் வேலை செய்து வந்த டாக்ரோஸ் ரசாயன தொழிற்சாலையிலிருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார்

சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அதனை அடுத்து வலி அவரின் குடும்பத்தினர், சந்திரகாசியை சிகிச்சைக்காக

கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சந்திரகாசி உயிரிழந்தார். இதற்கிடையே மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர் இதில் மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்

புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்க பட்ட எழில்வானனுக்கு கண்பார்வை பறிபோனது

இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் குமரேசன் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில்அலட்சியமாக செயல்பட்ட, சம்பந்தப்பட்ட டாக்ரோஸ் ரசாயன தொழிற்சாலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

மெத்தனால் என்பது CH3OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மமாகும். மெத்தில் ஆல்ககால், மரச்சாராயம், மர நாப்தா, கார்பினால், என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மரத்தைச் சிதைத்து வாலைவடித்தல் முறையில் மெத்தனால் தயாரிக்கப்பட்டதால் இது மரச்சாராயம் என்ற பெயரைப் பெற்றது.

இப்போதெல்லாம் மெத்தனால் பெருமளவில் கார்பனோராக்சைடை ஐதரசனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் நச்சுதன்மை அதிகம் கொண்டது. இதை அருந்தினால் மரணத்தை ஏற்படுத்தும்.

கடலூரில் ஊடக சேவை செய்யும் சில அசகாய சூரர்கள் உயிர் பலிக்கு காரணமான டாக்ரோஸ் ரசாயன தொழிற்சாலைக்கு ஆதரவாகவும் காவல்துறைக்கு எதிராவும்செயல்படுவது சரியா?என்ற கேள்வி எழுகிறது

கடலூர் மாவட்டத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையை சீண்டும் விதமாக செய்தியை வெளியிட்டு வருகின்றனர்

செய்தியை வெளியிடுவதில் எதிர்கட்சியை போன்று செயல்படும் பாங்கு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிரான மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலானதாக நிற்பது பணம் என்பது தான் ஊடக தர்மமா? என்ற கேள்வியை கடலூர் மாவட்ட மக்கள் ஊடக துறையினர் மீது வைக்கின்றனர்.

Next Story