Kathir News
Begin typing your search above and press return to search.

டிவிட்டரில் உதவி கோரிய தமிழக விவசாயி, ஆதரவு கரம் நீட்டிய பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா!

டிவிட்டரில் உதவி கோரிய தமிழக விவசாயி, ஆதரவு கரம் நீட்டிய பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா!

டிவிட்டரில் உதவி கோரிய தமிழக விவசாயி, ஆதரவு கரம் நீட்டிய பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 April 2020 10:41 AM IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் வொட்டாரஹல்லி என்னும் தமிழக கர்நாடக எல்லையில் கண்ணையன் என்ற விவசாயி 4 லட்சம் முதலீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிட்டு 70 டன்கள் உற்பத்தி செய்து வாங்க ஆள் இல்லாமல் தனது டிவிட்டரில் ரத்தன் டாட்டா மற்றும் மஹேந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹேந்திரா இருவரையும் இணைத்து தனது விளைச்சல் வீணாய் போகாமல் இருக்க உதவி கேட்டு புகைப்படத்துடன் பதிவிட்டார்.

இந்த பதிவு வைரல் ஆன நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா 15,000 கிலோ முட்டைகோஸ்களை கண்ணையனிடம் வாங்கிய நிலையில் ஏழைகளுக்கு அளித்தார்.

தேஜஸ்வியை தொடர்ந்து தாளவாடியை சேர்ந்த விடியல் இளைஞர் குழு 4,000 கிலோ முட்டைகோஸ்களை வாங்கி 3,000 கிராம புற விவசாய கூலி தொழிலாளிகளுக்கு வழங்கினர்.

விவசாயிகளின் இது போன்ற துயரங்களை தீர்க்க ஏற்கனவே இ-நாம் என்ற பெயரில் இணைய (மண்டி) சந்தைகளை ஏற்படுத்தி விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போது, ஊரடங்கின் சமயம் விவசாய விளைபொருள் சந்தை மற்றும் பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கிடைக்க பெற கிசான் ரத் விவசாயிகளின் ரதம் என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News