மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவிய புதுச்சேரி, உப்பளம் தொகுதி பா.ஜ.க வினர்.!
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவிய புதுச்சேரி, உப்பளம் தொகுதி பா.ஜ.க வினர்.!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கும் பாரத பிரதமர் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு நிவாரண உதவிகளைசெய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரெயின்போ பவுண்டேஷனில் 50க்கும் மேற்பட்ட தெய்வக் குழந்தைகள் (மனவளர்ச்சி குன்றிய) உள்ளனர்.
அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் உப்பளம் தொகுதி பாஜக சார்பில் முடிவெடுத்து 100 பிஸ்கட் பாக்கெட், 200 கிலோ அரிசி ஆகியவற்றை உப்பளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தகோபி @ சிவராஜ் , நகர் மாவட்ட தலைவர் அசோக் பாபு, சிறுபான்மை அணியின் முன்னாள் தலைவர் ஷாகுல் ஹமீத், சமூக ஊடகத்தின் மாநிலத் தலைவர் மகேஷ் ரெட்டி, நகர் மாவட்ட துணைத்தலைவர் விஜயரங்கம், உப்பளம் தொகுதி முன்னாள் தலைவர் பேட்டரி ஆனந்த், ராசு ஆகியோர் கலந்துகொண்டனர். பிஸ்கட் மற்றும் அரிசியை பெற்றுக்கொண்ட அவர்கள் பாரத பிரதமர் மற்றும் உப்பளம் தொகுதி பாஜகவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.