Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா பொய் பேசுகிறது: "எந்த வைரசையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது" : வூஹான் ஆய்வக தலைமை இயக்குனர் தொலைகாட்சி பேட்டி.!

அமெரிக்கா பொய் பேசுகிறது: "எந்த வைரசையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது" : வூஹான் ஆய்வக தலைமை இயக்குனர் தொலைகாட்சி பேட்டி.!

அமெரிக்கா பொய் பேசுகிறது: எந்த வைரசையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது : வூஹான் ஆய்வக தலைமை இயக்குனர் தொலைகாட்சி பேட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 2:43 AM GMT

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று அந்த நகரிலுள்ள பாம்பு, பூனை கறிகள் விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2002-ஆம் ஆண்டு பரவிய 'சாா்ஸ்' நோய்த் தொற்றைப் போலவே, புதிய வகை கரோனா நோய்த்தொற்றும் வௌவ்வாலில் தோன்றியதாகவும் இடையில் எறும்புத் தின்னி இனத்தின் உடலில் புகுந்து, பிறகு மனிதா்களின் உடலில் வளா்வதற்கேற்ப வகையில் மாறியதாகவும் சில விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனா்.

ஆனால், அமெரிக்க்கா இவற்றை முழுமையாக நம்பவில்லை. சீன அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது தாங்கள் சந்தேகப்படுவதாக அமெரிக்கர்கள் கருதினர். மேலும் சீனாவின் வூஹான் நகா்ப் பகுதியில் அமைந்துள்ள தீய வகை நுண்கிருமிகள் ஆய்வகத்திலிருந்து கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியிருக்கலாம் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் கிருமி ஆசியாவில் உள்ள சீனாவின் ஒரே ஆய்வகமான வூஹான் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளியேறியிருக்கலாம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ ஆகியோா் வெளிப்படையாக கூறினர். இதை அடுத்து உலகத்துக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்காக சீனா பெரும் தொகை கொடுக்க வேண்டும் என சில பாதிப்படைந்த ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை வைத்தன.

இந்த நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு தற்போது வூஹான் தீய வகை நுண்கிருமிகள் ஆய்வக தலைமை இயக்குநா் யுவான் ஷிமிங் நேற்று சீன அரசு தொலை காட்சியான CGTN TV தொலைகாட்சியில் முதன் முதலாக மறுப்பு தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றின் மூல ஆதாரமாக எங்களது ஆய்வகம் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரம் இல்லாதது, இந்த ஆய்வகத்தில் எந்த வகையான ஆய்வுகள் நடைபெறுகிறது, வைரஸ்களை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம் என்பது குறித்து எங்களுக்கு மிக நன்றாக தெரியும், கரோனா நோய்த்தொற்று எங்களது ஆய்வகத்திலிருந்து வெளியேறியிருப்பதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது. எங்கள் பணியாளர்கள் எவருக்கும் இந்த வைரஸ் தொடரவில்லை.

எங்களது ஆய்வகம் மிகவும் பாதுகாப்பானது. நாங்கள் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வூஹானில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதையும் எங்களது ஆய்வகத்தையும் தொடா்புப்படுத்திப் பேசுவது தவறாகும். ஏன் எனில் இந்த கொரோனா வைரஸ் மட்டுமல்ல எந்த ஒரு வைரசையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை அமெரிக்கா திசைத்திருப்புவதாக கூறினார் அவா்.

இந்த நிலையில் அமெரிக்கா ஜனவரி அல்லது மாதத்தில் கூட கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அதனால் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதாகவும் சீன ஆதரவு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. மேலும் அது தனது திறமையின்மையை மறைக்கவே சீனா மீது பழி போடுவதாகவும் அந்த பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News