Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை விட தப்ளிகி ஜமாத் கூட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மலேஷியா!

இந்தியாவை விட தப்ளிகி ஜமாத் கூட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மலேஷியா!

இந்தியாவை விட தப்ளிகி ஜமாத் கூட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மலேஷியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 April 2020 11:08 AM GMT

இந்தியாவை போன்றே தப்லீக் ஜமாஅத் கூட்டத்தின் வாயிலாக சீன வைரஸ் கொரோனா பரவி பாதிக்கப்பட்ட நாடு மலேஷியா.

ஸ்ரீவிஜய அரசு, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள், ஜப்பானியர்கள் என்று பலதரப்பட்டோர் 1957-ஆம் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி சுதந்திரம் அடைந்த மலேஷியா இன்று 61% இஸ்லாமிய ஜன தொகையுடன் தென் கிழக்கு ஆசியாவில் தன்னை முஸ்லிம் நாடுகளின் தலைமையகமாக்க பல்வேறு வகையான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமைகள் மறுக்கப்பட ஹிந்த்ரப்(Hindraf - Hindu Rights Action Force) அமைப்பு போராட்டம் நடத்தியது. காஷ்மீர் மாநிலத்தில் 370 சிறப்பு சட்டம் தளர்த்தியது தொடர்பாக இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் என மலேஷிய பிரதமர் பேசிய பின் SEA (Solvent Extractors Association of India) அமைப்பு மலேஷிய இறக்குமதியை தவிர்க்க கூறிய பின், பாமாயில் எண்ணெய் விற்பனை மூலமான வருவாய் பாதித்த பின் இறங்கி வந்தது. இவ்வாறு அந்நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராகவும் பெரும்பான்மையான இஸ்லாமிய சமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் சீன வைரஸ் கிருமியான கொரோனா பரவ பெரும் பங்கு வகித்த தப்ளிகி ஜமாத்தின் கூட்டத்தினால் மலேஷியாவும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

தப்ளிகி ஜமாத் வருடம் தோறும் முஸ்லிம்களை நபிகள் வாழ்ந்த காலத்தில் பின்பற்றப்பட்ட வாழ்வியலில் வாழ கற்றுக்கொடுத்து உண்மையான முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று இஜிடிமா என்ற பெயரில் 3 நாள் பெருந்திரள் மாநாடு அரை நூற்றாண்டாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் அண்டை நாடுகளில் இருந்தும் பெரும் அளவில் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர்.

மதீர் முகமது தனது மலேஷிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்து தற்காலிக பிரதமராக பதவியேற்ற பிப்ரவரி 28, தற்போதைய மலேஷிய பிரதமர் முகைதீன் யாசின் பதவியேற்ற மார்ச் 1 என்ற மலேஷிய அரசியலில் முக்கிய நாட்களை உள்ளடக்கிய பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரையான 3 நாள் இஜிடிமா மலேஷியாவில் சிலாங்கூர் பகுதியில் ஸ்ரீ பெட்லிங் தங்க கூம்பு மசூதியில் நடைபெற்று உள்ளது.

இதில் 16,000 பேர் கலந்துக் கொண்டு உள்ளனர். அவர்களில் 2000 சட்ட பூர்வ மற்ற குடியேறிகளான ரோகிங்யாகள் உட்பட 14,500 மலேஷியர்கள் மற்றும் தாய்லாந்து, புருனே, சிங்கப்பூர், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, நைஜீரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 1500 வெளிநாட்டினர் 3 நாள் மிகவும் நெருக்கமாக நிகழ்வில் கலந்துக் கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் மலேஷியாவில் கொரோனாவில் 34 வயதான நபரின் முதல் இறப்பு பதிவு செய்யப்பட்டது; இதில் அவர் தப்ளிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர் என்று தெரிய வந்தது. பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி 25 நோய் தொற்று பாதித்த மலேஷியா தப்ளிகி ஜமாத் கூட்டம் நடைபெற்ற 14 நாட்களுக்கு பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களால் கொரானா மார்ச் 17-ஆம் தேதி 513 பேருக்கு பரவியது.

இந்த தப்ளிகி ஜமாத் கூட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட 673 பேரில் மலேஷியா 513, ப்ருனே 61, கம்போடியா 22, சிங்கப்பூர் 5, தாய்லாந்து 2.

மலேஷிய சுகாதார துறை அமைச்சராக பதவியேற்ற ஆதம் பாபா முஸ்லிம் தலைவர்களுடன் பேசி மசூதிகளை முட உத்தரவிட்டார். பின் 14 நாட்களுக்கு ஊரடங்கு, அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடல், எல்லைகள் மூடல் என மலேஷியா ஸ்தம்பித்தது.

தற்போது இந்தியாவில் நடைபெற்ற தப்ளிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்டு நோய் தொற்றை பரிசோதனை செய்ய மறுப்பது போலவே மலேஷியாவிலும் பலர் பரிசோதனையில் உட்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தலைமறைவாகினர். இவர்களில் மியான்மார் பிரச்சினையின் போது சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 1 லட்சம் ரோகிங்யாக்களில் தப்ளிகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்ட 2000 பேரை அடையாளம் காண மிகவும் சிரமப்பட்டது என்று மலேஷிய பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்து உள்ளார்.

ஒரு கூட்டத்தின் முலம் 25 நோய் தொற்று பாதிப்பு 15 நாட்களில் 513-ஆக, 20 மடங்கு உயர்ந்துள்ளது.


மார்ச் 17-ஆம் தேதி ப்ருனேவில் 56 நோய் தொற்றில் 50 இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட நபர்கள். பிலிப்பைன்ஸில் மராவி தெற்கு பகுதியில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா இறப்பு இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட நபர்.

மார்ச் மாத தொடக்கத்தில் மலேஷியா இதன் பின்னர் இந்தியா என தப்லீக் ஜமாஅத் கூட்டத்தின் வாயிலாக கொரோனா வேர் ஊன்றி பரவி மக்களை மிகவும் பாதித்து உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News