குமரியில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக ரோட்டில் பேசிய காவல்நிலைய ஆய்வாளர், வலுக்கும் எதிர்ப்புகள்.!
குமரியில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக ரோட்டில் பேசிய காவல்நிலைய ஆய்வாளர், வலுக்கும் எதிர்ப்புகள்.!

இந்தியா நாடு முழுவதும் கொரனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா நிவாரணப் பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரவு பகல் பார்க்காமல் உணவு வழங்குதலும் மற்றும் சுகாதார பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்ட காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட குமரி மாவட்டம், நாகர்கோவில் சரகதிற்கு உட்பட்ட வடசேரி காவல்நிலைய ஆய்வாளர், தாயும் மகளுமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பெண்களை தெய்வமாக மதிக்கும் பாரத நாட்டில் காவல்துறையின் இச்செயல் பொது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது, ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அவருக்கு தேவையான காய்கறி மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாதனம் வாங்க அவருக்கு வாகனம் ஓட்ட தெரியாததால் பேருந்துகள் அனைத்தும் முடங்கிய நிலையில் தனது மகளுடன் தான் பயணம் செய்ய முடியும் அப்படி பயணம் செய்து வரும் போது இவ்வாறு தரக்குறைவாக பெண்கள் என்றும் பாராமல் நடுத்தெருவில் வைத்து ஆபாசமாக பேசி இளம் பெண்ணிடம் தகராறு செய்வது காவல்துறை மீது பொதுமக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.
வெளியில் வரும் பொதுமக்களிடம் அன்போடு நடந்து கொள்ளுங்கள் அராஜகமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று காவல்துறைக்கு மேல் அதிகாரிகள் அறிவுறுத்திய போதும் இது போன்று காவல்துறை தலைவரின் உத்தரவை மீறி நடுரோட்டில் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்வது சாமானிய மக்களை அச்சப் படுத்துவதோடு மக்களுக்கும் காவல்துறைக்கும் ஆன இடைவெளியை அதிகப்படுத்துகிறது.