'அண்ணாத்த' படம் வெளியாகுமா ? வெளியாகாதா ?
'அண்ணாத்த' படம் வெளியாகுமா ? வெளியாகாதா ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. வெற்றி ஒளிப்பதிவில், டி.இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஜினி இன்னும் ஓர் பாடல் காட்சியில் நடித்துக் கொடுத்து விட்டால் படம் நிறைவடைந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் ரஜினி இன்னும் 50 நாட்கள் நடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதாகப் படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் படத்தில் வில்லனாக நடிக்க 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனாவின் தாக்கம் குறைந்து நிலைமை கட்டுக்குள் வந்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என ரஜினி கூறியிருக்கிறாராம். இதனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு எப்படியும் குறைந்தது 3 மாதங்களாவது ஆகி விடும் எனத் தெரிகிறது. இதனால் இந்த ஆண்டு 'அண்ணாத்த' வெளியாவது கடினம் தான் என்கிறார்கள்.