Kathir News
Begin typing your search above and press return to search.

சீன பரிசோதனை கருவிகள் குறைபாடு, பணத்தை திரும்ப பெற பிரிட்டன் நடவடிக்கை!

சீன பரிசோதனை கருவிகள் குறைபாடு, பணத்தை திரும்ப பெற பிரிட்டன் நடவடிக்கை!

சீன பரிசோதனை கருவிகள் குறைபாடு, பணத்தை திரும்ப பெற பிரிட்டன் நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 2:45 PM GMT

சீனாவிடம் கோடிக்கணக்கான பரிசோதனை கருவிகளை வாங்கிய பிரிட்டன் தற்போது சீன பரிசோதனை கருவிகள் மீது குறைபாடு புகார்கள் வந்துள்ளதால் அதற்கான பணத்தை திரும்ப பெற முடிவெடுத்துள்ளது.

பிரிட்டனில் அரச குடும்பத்தை கூட விட்டு வைக்காத சீன வைரஸான(கொரோனா) தீநுண்மிக்கான 1.75 கோடி பரிசோதனை கருவிகளை வாங்க முடிவெடுத்தது. இதன்படி லெக்சம்பெர்க்கின் யுரோபின்ஸ் நிறுவனம், சீனாவின் ஹாங்க்சோவில் உள்ள ஆல் டெஸ்ட் நிறுவனம், குவாங்சோவில் உள்ள வுன்ட்வோ நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களிடம் அளித்தது. இவற்றில் 20 லட்சம் பரிசோதனை கருவிகளுக்கு பணம் செலுத்திவிட்டது.

இதில் வுன்ட்வோ சீன நிறுவன பரிசோதனை கருவிகள் வந்துள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் முற்றிலும் தவறாக இருப்பதாக கொரோனா பரிசோதனைக்கான பிரிட்டன் பொது சுகாதார ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜான் பெல்லிடம் புகார் குவிய துவங்கி உள்ளது. பிரிட்டன் பிரதமர் அலுவலகம் குறைபாடுகள் கொண்ட பரிசோதனை கருவிகளுக்கு செலுத்திய பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய தீநுண்மி ஒரு பக்கம் உலக நாடுகளில் மக்கள் பலி பெரும் எண்ணிக்கையில் உயர்ந்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஸ்பெயின், நெதர்லாந்து, செக் குடியரசு, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் என சீனாவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கிய நாடுகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதால் சீனா உலக அரங்கில் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. இதனால் சீனா தன் நாட்டில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனாவின் தேசிய மருத்துவ உற்பத்தி நிர்வாகத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடு சீன நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துமா என்றால் கேள்வி குறி தான் என்கிறது வரலாறு.

இவை ஒருபுறம் இருக்க ஸ்லோவாகியா நாட்டில் இருந்தும் சீன பரிசோதனை கருவிகள் மீது குறைபாடு புகார்கள் வந்துள்ள போதிலும் ஸ்லோவாகியா நாட்டில் பரிசோதனை கருவிகளை சரியாக கையாளவில்லை என்று சீன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்கள் மீதுள்ள குறைபாட்டை அந்நாட்டின் மீது திருப்பி உள்ளது சீன பொருட்கள் நுகர்வோரை கலக்கமடைய செய்துள்ளது.

Next Story