புதுச்சேரியில் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், நடந்தது என்ன ?
புதுச்சேரியில் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், நடந்தது என்ன ?

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்று வருகின்றனர். இந்த மது விற்பனைக்கு போலீஸ் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் வில்லியனூர், திருபுவனை, நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணி விடிய, விடிய நடந்தது. இந்த நிலையில் பாகூர் காவல் நிலைய ஆய்வாளர் அனில்குமார், வில்லியனூர் கவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். ஆனால் திடீர் இடமாற்றத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் திடீர் இடம் செய்யப்பட்டது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.