கொரோனா பரவல்.. சீனா மீது விசாரணை வேண்டும்.. இங்கிலாந்து மக்கள் விருப்பம்.!
கொரோனா பரவல்.. சீனா மீது விசாரணை வேண்டும்.. இங்கிலாந்து மக்கள் விருப்பம்.!

கொரோனா வைரஸ் பரவ காரணம் சீனா என பெரும்பாலான நாடுகள் குற்றம் சாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையை சீனா மறைத்து வைரஸ் பரவலை வேலியில் சொல்லாமல் மறைத்ததன் விளைவால் உலக நாடுகள் இன்று முடங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடியை சீனா எவ்வாறு எதிர்கொண்டது என்பது குறித்த விரிவான விசாரணை செய்ய வேண்டும் என இங்கிலாந்து மக்கள் விருமபுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை உருவாக்கி விட்டதை மறைப்பதற்கு இல்லை. இங்கிலாந்து மக்களில் பத்து நபர்களில் எட்டு நபர்கள் சீனா மீது சர்வதேச விசாரணை செய்ய வேண்டும்.
கொரோனா நச்சு சீனாவில் பரவ தொடங்கிய ஆரம்ப கால நடவடிக்கைகள் பெரும் மர்மமாக இருப்பதால் ஆரம்ப கால கொரோனா பரவல் குறித்து சர்வதேச விசாரணை செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.