இது மத பிரச்சினை கிடையாது, மறைப்பது தான் பிரச்சினை - ஈஷாவை வம்புக்கு இழுப்போர் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?
இது மத பிரச்சினை கிடையாது, மறைப்பது தான் பிரச்சினை - ஈஷாவை வம்புக்கு இழுப்போர் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

பிப்ரவரி 21 அன்று கோவை ஈஷா யோகாவில் சிவராத்திரி நடந்தது. ஜனவரி 30 அன்று இந்தியாவில் முதல் கொரோனா தொற்று நபர் கண்டறியப்பட்டார். மார்ச் 7 அன்று தமிழகத்தின் முதல் கொரோனா வைரஸ் தொற்று நபர் கண்டறியப்பட்டார். அதன் பிறகு தான் டெல்லி தப்ளிகி ஜமாத் மாநாடு நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் நம்பிக்கை ராஜ்,
"கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாகவே அதன் அறிகுறி காட்டி கொடுத்துடும். அதான் டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்துக்கு போனவர்களில் 50க்கும் மேற்பட்டோர் இப்ப கொரோனா நோயாளியா இருக்காங்க. 600க்கும் மேற்பட்டோர் இன்னும் வெளி வராம சமூக நோயாக இதை மாத்திட்டு இருக்காங்க" என்று கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், "ஒரு சிலர் 40 நாளுக்கு முன்னாடி நடந்த சிவராத்திரியை இழுத்து பேசிட்டு இருக்காங்க. ஒருவேளை ஈஷா சிவராத்திரி மூலம் கொரோனா வைரஸ் பரவியிருந்தா இந்நேரம் குறைந்தது 1 லட்சம் பேருக்காவது அது பரவியிருக்கும். அப்படி எதுவும் நடக்காதபோது சும்மா விதண்டாவாதமா அதையெல்லாம் பேசி ஏன் போலியா நடிக்கிறானுகன்னு தெரியலை. மீண்டும் சொல்றேன் இதுல மதம் பிரச்சினை கிடையாது மறைப்பதுதான் பிரச்சினை.
அந்த மாநாட்டுக்கு போனவங்க ரிஸ்க் எடுத்து போயிருக்காங்க. அங்கு போய் வந்தவர்கள் தாங்களாக முன்வந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இனியும் பெருசா நோய் பரவாம தடுக்க தங்களால் ஆன முயற்சிகளை செய்யனும் " என்று கூறியுள்ளார்.