கெஜ்ரிவாலுக்கு நெருங்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இலஞ்சம் கேட்டு மிரட்டல், டெல்லியில் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை.!
கெஜ்ரிவாலுக்கு நெருங்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. இலஞ்சம் கேட்டு மிரட்டல், டெல்லியில் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை.!

டெல்லி தியோலி பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர்.ராஜேந்திர சிங். இவர் துர்கா விஹார் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். குடிநீர் டேங்கர்களை வாங்கி டெல்லி குடிநீர் சப்ளை வாரியத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டின் படுக்கை அறையில் சீலிங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது, அதில் தனது குடிநீர் டேங்கர் ஒப்பந்தத்தை கேன்சல் செய்யப் போவதாக பல நாட்களாக ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்ட இலட்சங்கள் இலஞ்சமாக கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறினார், ஆனால் நான் தர மறுத்ததை அடுத்து, தனக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறவும் தடை ஏற்படுத்தி வந்தார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், மேலும் கடைசியில் தனது ஒப்பந்தத்தை ஜல் போர்டு அதிகாரிகளிடம் சொல்லி கேன்சல் செய்துவிட்டதாகவும் அதனால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
டாக்டர் தற்கொலைக்கு காரணமான ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் இலஞ்சம் ஊழலுக்கு எதிராக அண்ணா அசாரே போராட்டத்தின்போது தனது ஐ.டி எஞ்சினியர் பதவியை விட்டு விட்டு கேஜ்ரிவாலுடன் சேர்ந்தவர் என்றும், கேஜ்ரிவாலுடன் நெருங்கிய பழக்க வழக்கத்தால் 2 முறை எம்எல்ஏ ஆனார் என்றும், சமீபத்தில் டெல்லி குடிநீர் வாரிய எஞ்சினியர் ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வழக்குகள் உள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு கேஜ்ரிவால் எதிரிலேயே தன்னை கன்னத்தில் அறைந்ததாக டெல்லி முன்னாள் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ், எம்எல்ஏ பிரகாஷ் சார்வால் மீது புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.