தென்காசி மசூதியில் தொழுகையை நிறுத்த சென்ற போலீஸாரை தாக்கிய கும்பல்!
தென்காசி மசூதியில் தொழுகையை நிறுத்த சென்ற போலீஸாரை தாக்கிய கும்பல்!

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து வழிபாட்டு தளங்களும் அடைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தளங்களில் மக்கள் கூட்டம் கூடுவதால் தொற்று பரவ வாய்ப்பு இருக்கவே இந்த முடிவு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.
இது இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் நிலையில், பல இடங்களில் அவர்கள் தொழுகை நடத்த கூடுவது போலீஸாருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் தொழுகைகளை வீடுகளிலேயே செய்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாமிய தலைவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனிடைய, தென்காசியில் உள்ள நடுப்பேட்டை மசூதியில் அனுமதி இன்றி இன்று முஸ்லிம்கள் ஏராளமானோர் தொழுகைக்கு கூடியதாகக் தி ஹிந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது "இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீஸார் அப்ழுகுதிக்கு விரைந்து சென்றனர். ஜமாத் நிர்வாகிகளிடம் பேசி, அனைவரையும் வெளியே வருமாறு கூறினர். இதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதையத்து, அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்." எனவும் அப்போது, போலீஸாரிடம் சிலர் சிக்கினர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், காவல் ஆய்வாளர் உட்பட 2 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதாகக் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்த கலாட்டாவால் தென்காசி பதற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.